கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து,
என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;
நான் சிறுமையும் எளிமையுமானவன். (சங்கீதம்
86:1)
karththaavea, umathu seviyaich
saayththu, en vi'n'nappaththaik keattaru'lum; naan si’rumaiyum e'limaiyumaanavan. (sanggeetham 86:1)
என் ஆத்துமாவைக்
காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும். (சங்கீதம்
86:2)
en aaththumaavaik kaaththaru'lum, naan bakthiyu'l'lavan;
en theavanea, ummai nambiyirukki’ra umathu
adiyeanai neer iradchiyum. (sanggeetham 86:2)
ஆண்டவரே, எனக்கு
இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். (சங்கீதம்
86:3)
aa'ndavarea, enakku
iranggum,
naadoa’rum ummai noakkik kooppidugi’rean. (sanggeetham 86:3)
உமது அடியேனுடைய
ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே,
உம்மிடத்தில் என் ஆத்துமாவை
உயர்த்துகிறேன். (சங்கீதம் 86:4)
umathu adiyeanudaiya
aaththumaavai magizhchchiyaakkum; aa'ndavarea,
ummidaththil en aaththumaavai
uyarththugi’rean. (sanggeetham 86:4)
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற
யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். (சங்கீதம்
86:5)
aa'ndavarea, neer nallavarum, mannikki’ravarum, ummai noakkik kooppidugi’ra yaavarmealum
kirubai
migunthavarumaayirukki’reer. (sanggeetham 86:5)
கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து,
என் விண்ணப்பங்களின் சத்தத்தைக்
கவனியும். (சங்கீதம் 86:6)
karththaavea, en jebaththi’rkuch sevikoduththu, en vi'n'nappangga'lin saththaththaik kavaniyum.
(sanggeetham 86:6)
நான் துயரப்படுகிற
நாளில் உம்மை நோக்கிக்
கூப்பிடுவேன்; நீர் என்னைக்
கேட்டருளுவீர். (சங்கீதம் 86:7)
naan thuyarappadugi’ra naa'lil
ummai noakkik kooppiduvean;
neer ennaik keattaru'luveer. (sanggeetham 86:7)
ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு
நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு
ஒப்புமில்லை. (சங்கீதம் 86:8)
aa'ndavarea, theavarga'lukku'l'lea umakku
nigarumillai; ummudaiya
kiriyaiga'lukku oppumillai.
(sanggeetham 86:8)
ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து,
உமக்கு முன்பாகப் பணிந்து,
உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள். (சங்கீதம்
86:9)
aa'ndavarea, neer u'ndaakkina ellaa jaathiga'lum vanthu, umakku
munbaagap
pa'ninthu, umathu naamaththai
magimaippaduththuvaarga'l. (sanggeetham 86:9)
தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச்
செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே
தேவன். (சங்கீதம் 86:10)
theavareer magaththuvamu'l'lavarum athisayangga'laich seygi’ravarumaayirukki’reer; neer oruvarea theavan.
(sanggeetham 86:10)
கர்த்தாவே, உமது வழியை எனக்குப்
போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்;
நான் உமது நாமத்திற்குப்
பயந்திருக்கும்படி என் இருதயத்தை
ஒருமுகப்படுத்தும். (சங்கீதம் 86:11)
karththaavea, umathu
vazhiyai enakkup poathiyum,
naan umathu saththiyaththilea nadappean;
naan umathu naamaththi’rkup bayanthirukkumpadi en iruthayaththai orumugappaduththum. (sanggeetham 86:11)
என் தேவனாகிய
ஆண்டவரே உம்மை என் முழு இருதயத்தோடும்
துதித்து, உமது நாமத்தை
என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். (சங்கீதம்
86:12)
en theavanaagiya aa'ndavarea
ummai en muzhu iruthayaththoadum thuthiththu,
umathu naamaththai en’ren’raikkum magimaippaduththuvean.
(sanggeetham 86:12)
நீர் எனக்குப்
பாராட்டின உமது கிருபை
பெரியது; என் ஆத்துமாவைத்
தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (சங்கீதம்
86:13)
neer enakkup
paaraattina umathu
kirubai
periyathu; en aaththumaavaith thaazhntha
paathaa'laththi’rkuth thappuviththeer. (sanggeetham 86:13)
தேவனே, அகங்காரிகள்
எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார்
என் பிராணனை வாங்கத்
தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு
முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள். (சங்கீதம்
86:14)
theavanea, aganggaariga'l enakku
viroathamaay ezhumbugi’raarga'l, kodumaikkaararaagiya koottaththaar en piraa'nanai vaanggath theadugi’raarga'l, ummaith thangga'lukku munbaaga ni’ruththi noakkaathirukki’raarga'l. (sanggeetham 86:14)
ஆனாலும் ஆண்டவரே,
நீர் மனவுருக்கமும், இரக்கமும்,
நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள
தேவன். (சங்கீதம் 86:15)
aanaalum aa'ndavarea,
neer manavurukkamum, irakkamum,
neediya po’rumaiyum, poora'na kirubaiyum, saththiyamumu'l'la theavan.
(sanggeetham 86:15)
என்மேல் நோக்கமாகி,
எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி,
உமது அடியாளின் குமாரனை
இரட்சியும். (சங்கீதம் 86:16)
enmeal noakkamaagi, enakku
iranggum;
umathu vallamaiyai umathu
adiyaanukku aru'li, umathu
adiyaa'lin kumaaranai iradchiyum. (sanggeetham 86:16)
கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து
என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு
அநுகூலமாக ஒரு அடையாளத்தைக்
காண்பித்தருளும். (சங்கீதம் 86:17)
karththaavea, neer enakkuth thu'naiseythu ennaith
theat’rugi’rathai en pagaignar ka'ndu vedkappadumpadikku, enakku
anugoolamaaga oru adaiyaa'laththaik kaa'nbiththaru'lum. (sanggeetham 86:17)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!