தேவனே,
சீயோனில் உமக்காகத் துதியானது
அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை
உமக்குச் செலுத்தப்படும். (சங்கீதம்
65:1)
theavanea, seeyoanil umakkaagath thuthiyaanathu amainthu
kaaththirukki’rathu; poruththanai
umakkuch seluththappadum. (sanggeetham 65:1)
ஜெபத்தைக் கேட்கிறவரே,
மாம்சமான யாவரும் உம்மிடத்தில்
வருவார்கள். (சங்கீதம் 65:2)
jebaththaik keadki’ravarea, maamsamaana yaavarum
ummidaththil varuvaarga'l. (sanggeetham 65:2)
அக்கிரம விஷயங்கள்
என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவரீரோ
எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர். (சங்கீதம்
65:3)
akkirama vishayangga'l enmeal mignchi vallamaiko'ndathu; theavareeroa
engga'l
mee’ruthalga'lai nivirththiyaakkugi’reer. (sanggeetham 65:3)
உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்;
உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய
உமது வீட்டின் நன்மையால்
திருப்தியாவோம். (சங்கீதம் 65:4)
ummudaiya piraagaarangga'lil vaasamaayirukkumpadi neer therinthuko'ndu
searththukko'l'lugi’ravan baakkiyavaan; ummudaiya parisuththa aalayamaagiya umathu
veettin
nanmaiyaal thirupthiyaavoam. (sanggeetham 65:4)
பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான
சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும்
நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின்
தேவனே, நீர் பயங்கரமான
காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு
நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர்.
(சங்கீதம் 65:5)
boomiyin kadaiyaantharangga'lilum thooramaana
samuththirangga'lilumu'l'lavarga'l ellaarum
nambum
nambikkaiyaayirukki’ra engga'l iradchippin theavanea, neer bayanggaramaana kaariyangga'laich seygi’rathinaal engga'lukku neethiyu'l'la
uththaravu aru'lugi’reer. (sanggeetham 65:5)
வல்லமையை இடைகட்டிக்கொண்டு, உம்முடைய
பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி, (சங்கீதம்
65:6)
vallamaiyai idaikattikko'ndu, ummudaiya balaththinaal parvathangga'lai u’ruthippaduththi, (sanggeetham 65:6)
சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய
அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின்
அமளியையும் அமர்த்துகிறீர். (சங்கீதம்
65:7)
samuththirangga'lin mummuraththaiyum avaiga'ludaiya alaiga'lin iraichchalaiyum, janangga'lin ama'liyaiyum
amarththugi’reer. (sanggeetham 65:7)
கடையாந்தர இடங்களில்
குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள்; காலையையும்
மாலையையும் களிகூரப்பண்ணுகிறீர். (சங்கீதம்
65:8)
kadaiyaanthara idangga'lil kudiyirukki’ravarga'lum ummudaiya
adaiyaa'langga'linimiththam bayappadugi’raarga'l; kaalaiyaiyum
maalaiyaiyum ka'likoorappa'n'nugi’reer. (sanggeetham 65:8)
தேவரீர் பூமியை
விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர்
நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி
நீர் அதைத் திருத்தி,
அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். (சங்கீதம்
65:9)
theavareer boomiyai visaariththu atha’rku neerppaaychchugi’reer; tha'n'neer ni’raintha theavanathiyinaal athai migavum sezhippaakkugi’reer; ippadi
neer athaith thiruththi,
avarga'lukkuth thaaniyaththai vi'laivikki’reer. (sanggeetham 65:9)
அதின்
வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர்
இறைத்து, அதை மழைகளால்
கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர். (சங்கீதம்
65:10)
athin varappuga'l tha'niyaththakkathaay athin padaichchaalga'lukkuth tha'n'neer
i’raiththu, athai mazhaiga'laal karaiyappa'n'ni, athin payirai aaseervathikki’reer. (sanggeetham 65:10)
வருஷத்தை உம்முடைய
நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப்
பொழிகிறது. (சங்கீதம் 65:11)
varushaththai ummudaiya nanmaiyaal
mudisoottugi’reer; umathu
paathaiga'l neyyaayp
pozhigi’rathu. (sanggeetham 65:11)
வனாந்தர தாபரங்களிலும்
பொழிகிறது; மேடுகள் சுற்றிலும்
பூரிப்பாயிருக்கிறது. (சங்கீதம் 65:12)
vanaanthara thaabarangga'lilum pozhigi’rathu; meaduga'l sut’rilum poorippaayirukki’rathu. (sanggeetham 65:12)
மேய்ச்சலுள்ள வெளிகளில்
ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால்
மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.
(சங்கீதம் 65:13)
meaychchalu'l'la ve'liga'lil aaduga'l ni’rainthirukki’rathu; pa'l'laththaakkuga'l thaaniyaththaal moodiyirukki’rathu; avaiga'l kembeeriththup paadugi’rathu. (sanggeetham 65:13)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!