பலவானே, பொல்லாப்பில்
ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய
கிருபை எந்நாளுமுள்ளது. (சங்கீதம்
52:1)
balavaanea, pollaappil ean perumaipaaraattugi’raay? theavanudaiya kirubai ennaa'lumu'l'lathu. (sanggeetham 52:1)
நீ
கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும்
உன் நாவு தீட்டப்பட்ட
சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
(சங்கீதம் 52:2)
nee keaduga'laich seyya
eththanampa'n'nugi’raay, kabaduseyyum un naavu theettappatta savaragan kaththiyaippoal irukki’rathu. (sanggeetham 52:2)
நன்மையைப்பார்க்கிலும் தீமையையும்,
யதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும்
விரும்புகிறாய். (சேலா.) (சங்கீதம்
52:3)
nanmaiyaippaarkkilum theemaiyaiyum, yathaarththam
peasugi’rathaippaarkkilum poyyaiyum
virumbugi’raay. (sealaa.) (sanggeetham 52:3)
கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய். (சங்கீதம்
52:4)
kabadamu'l'la naavea, sanggarikkum
sagala vaarththaiga'laiyum nee virumbugi’raay. (sanggeetham 52:4)
தேவன்
உன்னை என்றென்றைக்கும் இராதபடி
அழித்துப்போடுவார்; அவர் உன்னைப்
பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி,
நீ ஜீவனுள்ளோர் தேசத்தில்
இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)
(சங்கீதம் 52:5)
theavan unnai en’ren’raikkum iraathapadi azhiththuppoaduvaar; avar unnaip pidiththu,
un vaasasthalaththilirunthu pidunggi, nee jeevanu'l'loar theasaththil iraathapadikku unnai nirmoolamaakkuvaar. (sealaa.) (sanggeetham 52:5)
நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து,
அவனைப்பார்த்து நகைத்து: (சங்கீதம்
52:6)
neethimaanga'l athaik
ka'ndu bayanthu, avanaippaarththu nagaiththu: (sanggeetham 52:6)
இதோ,
தேவனைத் தன் பெலனாக
எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி,
தன் தீவினையில் பலத்துக்கொண்ட
மனுஷன் இவன்தான் என்பார்கள்.
(சங்கீதம் 52:7)
ithoa, theavanaith than belanaaga e'n'naamal,
than selvapperukkaththai nambi, than theevinaiyil balaththukko'nda manushan
ivanthaan enbaarga'l. (sanggeetham 52:7)
நானோ
தேவனுடைய ஆலயத்தில் பச்சையான
ஒலிவமரத்தைப்போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை
என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன். (சங்கீதம்
52:8)
naanoa theavanudaiya aalayaththil
pachchaiyaana olivamaraththaippoalirukki’rean, theavanudaiya kirubaiyai en’ren’raikkum nambiyirukki’rean. (sanggeetham 52:8)
நீரே
இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து,
உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய
பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது. (சங்கீதம்
52:9)
neerea ithaich seytheer en’ru ummai en’ren’raikkum thuthiththu,
umathu naamaththi’rkuk kaaththiruppean; ummudaiya
parisuththavaanga'lukku munbaaga athu nalamaayirukki’rathu. (sanggeetham 52:9)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!