என் தேவனே,
என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
எனக்கு உதவி செய்யாமலும்,
நான் கதறிச் சொல்லும்
வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? (சங்கீதம்
22:1)
en theavanea,
en theavanea, ean ennaik kaivitteer? enakku
uthavi seyyaamalum, naan katha’rich sollum vaarththaiga'laik kea'laamalum ean thooramaayirukki’reer? (sanggeetham 22:1)
என் தேவனே,
நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே
கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.
(சங்கீதம் 22:2)
en theavanea,
naan pagalilea kooppidugi’rean, uththaravukodeer; iravilea
kooppidugi’rean, enakku
amaithalillai. (sanggeetham 22:2)
இஸ்ரவேலின் துதிகளுக்குள்
வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.
(சங்கீதம் 22:3)
isravealin thuthiga'lukku'l vaasamaayirukki’ra theavareerea parisuththar. (sanggeetham 22:3)
எங்கள் பிதாக்கள்
உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள்; நம்பின
அவர்களை நீர் விடுவித்தீர்.
(சங்கீதம் 22:4)
engga'l pithaakka'l ummidaththil
nambikkaivaiththaarga'l; nambina avarga'lai neer viduviththeer. (sanggeetham 22:4)
உம்மை நோக்கிக்
கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள். (சங்கீதம்
22:5)
ummai noakkik
kooppittuth thappinaarga'l; ummai nambi vedkappattuppoagaathirunthaarga'l. (sanggeetham 22:5)
நானோ ஒரு புழு, மனுஷனல்ல;
மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால்
அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். (சங்கீதம்
22:6)
naanoa oru puzhu, manushanalla;
manusharaal ninthikkappattum, janangga'laal avamathikkappattum irukki’rean. (sanggeetham 22:6)
என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப்
பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி,
தலையைத் துலுக்கி: (சங்கீதம்
22:7)
ennaip paarkki’ravarga'lellaarum ennaip pariyaasampa'n'ni, uthattaip pithukki,
thalaiyaith thulukki: (sanggeetham 22:7)
கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல்
பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.
(சங்கீதம் 22:8)
karththarmeal nambikkaiyaayirunthaanea, avar ivanai viduvikkattum; ivanmeal
piriyamaayirukki’raarea, ippozhuthu
ivanai meettuvidattum engi’raarga'l. (sanggeetham 22:8)
நீரே என்னைக்
கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை
நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர். (சங்கீதம்
22:9)
neerea ennaik
karppaththilirunthu eduththavar; en thaayin mulaippaalai
naan u'ngaiyil ennai ummudaiyapearil nambikkaiyaayirukkappa'n'nineer. (sanggeetham 22:9)
கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்;
நான் என் தாயின்
வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர். (சங்கீதம்
22:10)
karppaththilirunthu ve'lippattapoathea umathu
saarbil vizhunthean;
naan en thaayin
vayit’ril
irunthathumuthal neer en theavanaayirukki’reer. (sanggeetham 22:10)
என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து
கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.
(சங்கீதம் 22:11)
ennaivittuth thooramaagaatheayum; aabaththu kittiyirukki’rathu, sagaayarum illai.
(sanggeetham 22:11)
அநேகம் காளைகள்
என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான்
தேசத்துப் பலத்த எருதுகள்
என்னை வளைந்துகொண்டது. (சங்கீதம்
22:12)
aneagam kaa'laiga'l ennaich soozhnthirukki’rathu; baasaan theasaththup balaththa eruthuga'l ennai va'lainthuko'ndathu. (sanggeetham 22:12)
பீறி கெர்ச்சிக்கிற
சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள்
வாயைத் திறக்கிறார்கள். (சங்கீதம்
22:13)
pee’ri kerchchikki’ra singgaththaippoal, enmeal thangga'l vaayaith
thi’rakki’raarga'l. (sanggeetham 22:13)
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்;
என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது,
என் இருதயம் மெழுகுபோலாகி,
என் குடல்களின் நடுவே உருகிற்று. (சங்கீதம்
22:14)
tha'n'neeraippoala oot’ru'ndean; en elumbuga'lellaam kattuvittathu, en iruthayam mezhugupoalaagi, en kudalga'lin naduvea
urugit’ru. (sanggeetham 22:14)
என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது;
என் நாவு மேல்வாயோடே
ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே
போடுகிறீர். (சங்கீதம் 22:15)
en belan oattaippoal kaaynthathu;
en naavu mealvaayoadea
ottikko'ndathu; ennai mara'naththoo'lilea poadugi’reer. (sanggeetham 22:15)
நாய்கள் என்னைச்
சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம்
என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக்
குத்தினார்கள். (சங்கீதம் 22:16)
naayga'l ennaich soozhnthirukki’rathu; pollaathavarga'lin koottam ennai va'lainthuko'ndathu; en kaiga'laiyum en kaalga'laiyum uruvak
kuththinaarga'l. (sanggeetham 22:16)
என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள்
என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். (சங்கீதம்
22:17)
en elumbuga'laiyellaam naan e'n'nalaam; avarga'l ennai noakkip paarththukko'ndirukki’raarga'l. (sanggeetham 22:17)
என் வஸ்திரங்களைத்
தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள். (சங்கீதம்
22:18)
en vasthirangga'laith thangga'lukku'l'lea panggittu, en udaiyinpearil seettuppoadugi’raarga'l. (sanggeetham 22:18)
ஆனாலும் கர்த்தாவே,
நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச்
சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும். (சங்கீதம்
22:19)
aanaalum karththaavea,
neer enakkuth thooramaagaatheayum; en belanea, enakkuch sagaayampa'n'nath
theeviriththukko'l'lum. (sanggeetham 22:19)
என் ஆத்துமாவைப்
பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை
நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.
(சங்கீதம் 22:20)
en aaththumaavaip pattayaththi’rkum, enakku arumaiyaanathai naayga'lin thushdaththanaththi’rkum thappuviyum.
(sanggeetham 22:20)
என்னைச் சிங்கத்தின்
வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில்
இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர். (சங்கீதம்
22:21)
ennaich singgaththin vaayilirunthu
iradchiyum; naan kaa'ndaamirugaththin kombuga'lil irukkumpoathu enakkuch sevikoduththaru'lineer. (sanggeetham 22:21)
உம்முடைய நாமத்தை
என் சகோதரருக்கு அறிவித்து,
சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
(சங்கீதம் 22:22)
ummudaiya naamaththai
en sagoathararukku a’riviththu, sabainaduvil ummaith
thuthippean. (sanggeetham 22:22)
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத்
துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே,
நீங்கள் எல்லாரும் அவரைக்
கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே,
நீங்கள் எல்லாரும் அவர்பேரில்
பயபக்தியாயிருங்கள். (சங்கீதம் 22:23)
karththarukkup bayappadugi’ravarga'lea, avaraith
thuthiyungga'l; yaakkoabin santhathiyaarea, neengga'l ellaarum
avaraik kanampa'n'nungga'l; isravealin vamsaththaarea, neengga'l ellaarum
avarpearil bayabakthiyaayirungga'l. (sanggeetham 22:23)
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை
அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய
முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக்
கேட்டருளினார். (சங்கீதம் 22:24)
ubaththiravappattavanudaiya ubaththiravaththai avar a’rpamaaye'n'naamalum
aruvarukkaamalum, thammudaiya mugaththai avanukku
ma’raikkaamalumirunthu, thammai
noakki avan kooppidugaiyil avanaik
keattaru'linaar. (sanggeetham 22:24)
மகா சபையிலே
நான் உம்மைத் துதிப்பேன்;
அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக
என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
(சங்கீதம் 22:25)
mahaa sabaiyilea naan ummaith
thuthippean; avarukkup bayappadugi’ravarga'lukku munbaaga en poruththanaiga'laich seluththuvean. (sanggeetham 22:25)
சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத்
திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள்
அவரைத் துதிப்பார்கள்; உங்கள்
இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
(சங்கீதம் 22:26)
saanthaku'namu'l'lavarga'l pusiththuth thirupthiyadaivaarga'l; karththaraith theadugi’ravarga'l avaraith thuthippaarga'l; ungga'l iruthayam
en’ren’raikkum vaazhum.
(sanggeetham 22:26)
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்;
ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். (சங்கீதம்
22:27)
boomiyin ellaiga'lellaam ninaivukoornthu karththaridaththil thirumbum; jaathiga'ludaiya santhathiga'lellaam umathu samugaththil thozhuthuko'l'lum. (sanggeetham 22:27)
ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
(சங்கீதம் 22:28)
raajyam karththarudaiyathu; avar jaathiga'lai aa'lugi’ravar. (sanggeetham 22:28)
பூமியின் செல்வவான்கள்
யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில்
இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு
முன்பாக வணங்குவார்கள். ஒருவனும்
தன் ஆத்துமா அழியாதபடி
அதைக் காக்கக்கூடாதே. (சங்கீதம்
22:29)
boomiyin selvavaanga'l yaavarum
pusiththup pa'ninthuko'lvaarga'l; puzhuthiyil
i’ranggugi’ravarga'l yaavarum avarukku
munbaaga
va'nangguvaarga'l. oruvanum
than aaththumaa azhiyaathapadi athaik
kaakkakkoodaathea. (sanggeetham 22:29)
ஒரு சந்ததி
அவரைச் சேவிக்கும்; தலைமுறை
தலைமுறையாக அது ஆண்டவருடைய
சந்ததி என்னப்படும். (சங்கீதம்
22:30)
oru santhathi avaraich seavikkum; thalaimu’rai thalaimu’raiyaaga athu aa'ndavarudaiya santhathi ennappadum.
(sanggeetham 22:30)
அவர்கள் வந்து:
அவரே இவைகளைச் செய்தார்
என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு
அவருடைய நீதியை அறிவிப்பார்கள். (சங்கீதம்
22:31)
avarga'l vanthu: avarea
ivaiga'laich seythaar en’ru pi’rakkappoagi’ra janangga'lukku avarudaiya neethiyai
a’rivippaarga'l. (sanggeetham 22:31)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!