என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து,
என் கட்டளைகளை உன்னிடத்தில்
பத்திரப்படுத்து. (நீதிமொழிகள் 7:1)
en maganea, nee en vaarththaiga'laik kaaththu,
en katta'laiga'lai unnidaththil paththirappaduththu. (neethimozhiga’l 7:1)
என் கட்டளைகளையும்
என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள்,
அப்பொழுது பிழைப்பாய். (நீதிமொழிகள்
7:2)
en katta'laiga'laiyum en poathagaththaiyum un ka'nma'niyaippoal kaaththukko'l, appozhuthu
pizhaippaay. (neethimozhiga’l 7:2)
அவைகளை உன் விரல்களில் கட்டி,
அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள்.
(நீதிமொழிகள் 7:3)
avaiga'lai un viralga'lil katti, avaiga'lai un iruthaya palagaiyil ezhuthikko'l.
(neethimozhiga’l 7:3)
இச்சகவார்த்தைகளைப் பேசும்
அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு
உன்னை விலக்கிக் காப்பதற்காக,
(நீதிமொழிகள் 7:4)
ichchagavaarththaiga'laip peasum anniya
pe'n'naagiya parasthireekku unnai vilakkik kaappatha’rkaaga, (neethimozhiga’l 7:4)
ஞானத்தை நோக்கி,
நீ என் சகோதரி
என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள்
என்றும் சொல்வாயாக. (நீதிமொழிகள்
7:5)
gnaanaththai noakki,
nee en sagoathari en’rum, buththiyaippaarththu, nee en inaththaa'l
en’rum
solvaayaaga. (neethimozhiga’l 7:5)
நான் என் வீட்டின் ஜன்னலருகே
நின்று, பலகணி வழியாய்ப்
பார்த்தபோது, (நீதிமொழிகள் 7:6)
naan en veettin jannalarugea nin’ru, palaga'ni vazhiyaayp paarththapoathu, (neethimozhiga’l 7:6)
பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக்கண்டு அவனைக்
கவனித்தேன். (நீதிமொழிகள் 7:7)
peathaiyarga'laagiya vaalibarukku'l'lea oru buththiyeena vaalibanaikka'ndu avanaik kavaniththean. (neethimozhiga’l 7:7)
அவன் மாலைமயங்கும்
அஸ்தமனநேரத்திலும், இரவின் இருண்ட
அந்தகாரத்திலும், (நீதிமொழிகள் 7:8)
avan maalaimayanggum asthamananearaththilum, iravin
iru'nda anthagaaraththilum, (neethimozhiga’l 7:8)
அவள் இருக்கும்
சந்துக்கடுத்த தெருவில் சென்று,
அவள் வீட்டுவழியாய் நடந்துபோனான்.
(நீதிமொழிகள் 7:9)
ava'l irukkum
santhukkaduththa theruvil
sen’ru, ava'l veettuvazhiyaay nadanthupoanaan. (neethimozhiga’l 7:9)
அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள
ஒரு ஸ்திரீ அவனுக்கு
எதிர்ப்பட்டாள். (நீதிமொழிகள் 7:10)
appozhuthu ithoa,
veasiyin
aadaiyaabara'nanthariththa thanthiramanamu'l'la oru sthiree avanukku
ethirppattaa'l. (neethimozhiga’l 7:10)
அவள் வாயாடியும்
அடங்காதவளுமானவள்; அவள் கால்கள்
வீட்டிலே தரிக்கிறதில்லை. (நீதிமொழிகள்
7:11)
ava'l vaayaadiyum
adanggaathava'lumaanava'l; ava'l kaalga'l veettilea tharikki’rathillai. (neethimozhiga’l 7:11)
சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை
வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பாள். (நீதிமொழிகள்
7:12)
silavea'lai ve'liyiliruppaa'l, silavea'lai veethiyiliruppaa'l, santhuga'lthoa’rum pathiviruppaa'l. (neethimozhiga’l 7:12)
அவள் அவனைப்
பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப்
பார்த்து: (நீதிமொழிகள் 7:13)
ava'l avanaip
pidiththu muththagnseythu, mugam naa'naamal avanaip
paarththu: (neethimozhiga’l 7:13)
சமாதான பலிகள்
என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன். (நீதிமொழிகள்
7:14)
samaathaana baliga'l enmeal
sumanthirunthathu, in’raikkuththaan en poruththanaiga'lai ni’raiveat’rinean. (neethimozhiga’l 7:14)
ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப்
புறப்பட்டு, உன் முகத்தை
ஆவலோடு தேடினேன்; இப்பொழுது
உன்னைக் கண்டுபிடித்தேன். (நீதிமொழிகள்
7:15)
aathalaal, naan unnaich santhikkap pu’rappattu, un mugaththai aavaloadu theadinean;
ippozhuthu unnaik ka'ndupidiththean. (neethimozhiga’l 7:15)
என் மஞ்சத்தை
இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான
மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன். (நீதிமொழிகள்
7:16)
en magnchaththai iraththina
kamba'langga'laalum, egipthutheasaththu visiththiramaana melliya vasthirangga'laalum singgaariththean. (neethimozhiga’l 7:16)
என் படுக்கையை
வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன். (நீதிமொழிகள்
7:17)
en padukkaiyai
ve'l'laippoa'laththaalum santhanaththaalum
ilavanggappattaiyaalum vaasanai kattinean. (neethimozhiga’l 7:17)
வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால்
பூரிப்போம். (நீதிமொழிகள் 7:18)
vaa, vidiya’rkaalamvaraikkum samboagamaayiruppoam,
inbangga'linaal poorippoam.
(neethimozhiga’l 7:18)
புருஷன் வீட்டிலே
இல்லை, தூரப் பிரயாணம்
போனான். (நீதிமொழிகள் 7:19)
purushan veettilea illai,
thoorap pirayaa'nam poanaan.
(neethimozhiga’l 7:19)
பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான்,
குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு
வருவான் என்று சொல்லி,
(நீதிமொழிகள் 7:20)
pa'nappaiyaith than kaiyilea ko'ndupoanaan, ku’rikkappatta naa'lilea veettukku varuvaan
en’ru
solli,
(neethimozhiga’l 7:20)
தன் மிகுதியான
இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள். (நீதிமொழிகள்
7:21)
than miguthiyaana iniya so’rka'laal avanai vasappaduththi, than uthaduga'lin mathuravaakkinaal avanai
i'nanggappa'n'ninaa'l. (neethimozhiga’l 7:21)
உடனே அவன் அவள் பின்னே
சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப்
போவது போலும், (நீதிமொழிகள்
7:22)
udanea avan ava'l pinnea
sen’raan; oru maadu adikkappadumpadi selvathupoalum, oru moodan vilanggidappattuth tha'ndanaikkup poavathu
poalum, (neethimozhiga’l 7:22)
ஒரு குருவி
தன் பிராணனை வாங்கும்
கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப்
பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப்
பிளந்தது. (நீதிமொழிகள் 7:23)
oru kuruvi
than piraa'nanai vaanggum ka'n'niyai
a’riyaamal athil vizhath theevirikki’rathupoalum, ava'lukkup
pinnea poanaan; ambu avan eeralaip pi'lanthathu.
(neethimozhiga’l 7:23)
ஆதலால் பிள்ளைகளே,
எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக்
கவனியுங்கள். (நீதிமொழிகள் 7:24)
aathalaal pi'l'laiga'lea, enakkuch sevikodungga'l; en vaayin
vaarththaiga'laik kavaniyungga'l. (neethimozhiga’l 7:24)
உன் இருதயம்
அவள் வழியிலே சாயவேண்டாம்;
அவள் பாதையிலே மயங்கித்
திரியாதே. (நீதிமொழிகள் 7:25)
un iruthayam
ava'l vazhiyilea saayavea'ndaam; ava'l paathaiyilea mayanggith thiriyaathea.
(neethimozhiga’l 7:25)
அவள் அநேகரைக்
காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள்
அநேகரைக் கொலைசெய்தாள். (நீதிமொழிகள்
7:26)
ava'l aneagaraik kaayappaduththi, vizhappa'n'ninaa'l; balavaanga'l aneagaraik kolaiseythaa'l. (neethimozhiga’l 7:26)
அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (நீதிமொழிகள்
7:27)
ava'l veedu paathaa'laththukkuppoam vazhi;
athu mara'na a’raiga'lukkuk ko'ndupoayvidum. (neethimozhiga’l 7:27)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!