Tuesday, June 28, 2016

Aathiyaagamam 47 | ஆதியாகமம் 47 | Genesis 47

யோசேப்பு  பார்வோனிடத்தில்  போய்:  என்  தகப்பனும்  என்  சகோதரரும்,  தங்கள்  ஆடுமாடுகளோடும்  தங்களுக்கு  உண்டான  எல்லாவற்றோடுங்கூடக்  கானான்தேசத்திலிருந்து  வந்தார்கள்;  இப்பொழுது  கோசேன்  நாட்டில்  இருக்கிறார்கள்  என்று  சொல்லி;  (ஆதியாகமம்  47:1)

yoaseappu  paarvoanidaththil  poay:  en  thagappanum  en  sagoathararum,  thangga'l  aadumaaduga'loadum  thangga'lukku  u'ndaana  ellaavat’roadungkoodak  kaanaantheasaththilirunthu  vanthaarga'l;  ippozhuthu  koasean  naattil  irukki’raarga'l  en’ru  solli;  (aathiyaagamam  47:1)

தன்  சகோதரரில்  ஐந்துபேரைப்  பார்வோனுக்கு  முன்பாகக்  கொண்டுபோய்  நிறுத்தினான்.  (ஆதியாகமம்  47:2)

than  sagoathararil  ainthupearaip  paarvoanukku  munbaagak  ko'ndupoay  ni’ruththinaan.  (aathiyaagamam  47:2)

பார்வோன்  அவனுடைய  சகோதரரை  நோக்கி:  உங்கள்  தொழில்  என்ன  என்று  கேட்டான்;  அதற்கு  அவர்கள்:  உமது  அடியாராகிய  நாங்களும்  எங்கள்  பிதாக்களும்  மந்தை  மேய்க்கிறவர்கள்  என்று  பார்வோனிடத்தில்  சொன்னதுமன்றி,  (ஆதியாகமம்  47:3)

paarvoan  avanudaiya  sagoathararai  noakki:  ungga'l  thozhil  enna  en’ru  keattaan;  atha’rku  avarga'l:  umathu  adiyaaraagiya  naangga'lum  engga'l  pithaakka'lum  manthai  meaykki’ravarga'l  en’ru  paarvoanidaththil  sonnathuman’ri,  (aathiyaagamam  47:3)

கானான்  தேசத்திலே  பஞ்சம்  கொடிதாயிருக்கிறது;  உமது  அடியாரின்  மந்தைகளுக்கு  மேய்ச்சல்  இல்லாமையால்,  இத்தேசத்திலே  தங்கவந்தோம்;  உமது  அடியாராகிய  நாங்கள்  கோசேன்  நாட்டிலே  குடியிருக்கும்படி  தயவுசெய்யவேண்டும்  என்று  வேண்டிக்கொண்டார்கள்.  (ஆதியாகமம்  47:4)

kaanaan  theasaththilea  pagncham  kodithaayirukki’rathu;  umathu  adiyaarin  manthaiga'lukku  meaychchal  illaamaiyaal,  iththeasaththilea  thanggavanthoam;  umathu  adiyaaraagiya  naangga'l  koasean  naattilea  kudiyirukkumpadi  thayavuseyyavea'ndum  en’ru  vea'ndikko'ndaarga'l.  (aathiyaagamam  47:4)

அப்பொழுது  பார்வோன்  யோசேப்பை  நோக்கி:  உன்  தகப்பனும்  உன்  சகோதரரும்  உன்னிடத்தில்  வந்திருக்கிறார்களே.  (ஆதியாகமம்  47:5)

appozhuthu  paarvoan  yoaseappai  noakki:  un  thagappanum  un  sagoathararum  unnidaththil  vanthirukki’raarga'lea.  (aathiyaagamam  47:5)

எகிப்துதேசம்  உனக்கு  முன்பாக  இருக்கிறது;  தேசத்திலுள்ள  நல்ல  இடத்திலே  உன்  தகப்பனையும்  உன்  சகோதரரையும்  குடியேறும்படி  செய்;  அவர்கள்  கோசேன்  நாட்டிலே  குடியிருக்கலாம்;  அவர்களுக்குள்ளே  திறமையுள்ளவர்கள்  உண்டென்று  உனக்குத்  தெரிந்திருந்தால்,  அவர்களை  என்  ஆடுமாடுகளை  விசாரிக்கிறதற்குத்  தலைவராக  வைக்கலாம்  என்றான்.  (ஆதியாகமம்  47:6)

egipthutheasam  unakku  munbaaga  irukki’rathu;  theasaththilu'l'la  nalla  idaththilea  un  thagappanaiyum  un  sagoathararaiyum  kudiyea’rumpadi  sey;  avarga'l  koasean  naattilea  kudiyirukkalaam;  avarga'lukku'l'lea  thi’ramaiyu'l'lavarga'l  u'nden’ru  unakkuth  therinthirunthaal,  avarga'lai  en  aadumaaduga'lai  visaarikki’ratha’rkuth  thalaivaraaga  vaikkalaam  en’raan.  (aathiyaagamam  47:6)

பின்பு,  யோசேப்பு  தன்  தகப்பனாகிய  யாக்கோபை  அழைத்துக்கொண்டுவந்து,  அவனைப்  பார்வோனுக்கு  முன்பாக  நிறுத்தினான்.  யாக்கோபு  பார்வோனை  ஆசீர்வதித்தான்.  (ஆதியாகமம்  47:7)

pinbu,  yoaseappu  than  thagappanaagiya  yaakkoabai  azhaiththukko'nduvanthu,  avanaip  paarvoanukku  munbaaga  ni’ruththinaan.  yaakkoabu  paarvoanai  aaseervathiththaan.  (aathiyaagamam  47:7)

பார்வோன்  யாக்கோபை  நோக்கி:  உமக்கு  வயது  என்ன  என்று  கேட்டான்.  (ஆதியாகமம்  47:8)

paarvoan  yaakkoabai  noakki:  umakku  vayathu  enna  en’ru  keattaan.  (aathiyaagamam  47:8)

அதற்கு  யாக்கோபு:  நான்  பரதேசியாய்ச்  சஞ்சரித்த  நாட்கள்  நூற்றுமுப்பது  வருஷம்;  என்  ஆயுசுநாட்கள்  கொஞ்சமும்  சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது;  அவைகள்  பரதேசிகளாய்ச்  சஞ்சரித்த  என்  பிதாக்களுடைய  ஆயுசு  நாட்களுக்கு  வந்து  எட்டவில்லை  என்று  பார்வோனுடனே  சொன்னான்.  (ஆதியாகமம்  47:9)

atha’rku  yaakkoabu:  naan  paratheasiyaaych  sagnchariththa  naadka'l  noot’rumuppathu  varusham;  en  aayusunaadka'l  kognchamum  sagnchalamu'l'lathumaayirukki’rathu;  avaiga'l  paratheasiga'laaych  sagnchariththa  en  pithaakka'ludaiya  aayusu  naadka'lukku  vanthu  ettavillai  en’ru  paarvoanudanea  sonnaan.  (aathiyaagamam  47:9)

பின்னும்  யாக்கோபு  பார்வோனை  ஆசீர்வதித்து,  அவன்  சமுகத்தினின்று  புறப்பட்டுப்போனான்.  (ஆதியாகமம்  47:10)

pinnum  yaakkoabu  paarvoanai  aaseervathiththu,  avan  samugaththinin’ru  pu’rappattuppoanaan.  (aathiyaagamam  47:10)

பார்வோன்  கட்டளையிட்டபடியே,  யோசேப்பு  தன்  தகப்பனுக்கும்  தன்  சகோதரருக்கும்  எகிப்துதேசத்திலே  நல்ல  நாடாகிய  ராமசேஸ்  என்னும்  நாட்டிலே  சுதந்தரம்  கொடுத்து,  அவர்களைக்  குடியேற்றினான்.  (ஆதியாகமம்  47:11)

paarvoan  katta'laiyittapadiyea,  yoaseappu  than  thagappanukkum  than  sagoathararukkum  egipthutheasaththilea  nalla  naadaagiya  raamaseas  ennum  naattilea  suthantharam  koduththu,  avarga'laik  kudiyeat’rinaan.  (aathiyaagamam  47:11)

யோசேப்பு  தன்  தகப்பனையும்  தன்  சகோதரரையும்  தன்  தகப்பனுடைய  குடும்பத்தார்  அனைவரையும்,  அவரவர்கள்  குடும்பத்திற்குத்தக்கதாய்  ஆகாரம்  கொடுத்து  ஆதரித்துவந்தான்.  (ஆதியாகமம்  47:12)

yoaseappu  than  thagappanaiyum  than  sagoathararaiyum  than  thagappanudaiya  kudumbaththaar  anaivaraiyum,  avaravarga'l  kudumbaththi’rkuththakkathaay  aagaaram  koduththu  aathariththuvanthaan.  (aathiyaagamam  47:12)

பஞ்சம்  மிகவும்  கொடிதாயிருந்தது;  தேசமெங்கும்  ஆகாரம்  கிடையாமற்போயிற்று;  எகிப்துதேசமும்  கானான்  தேசமும்  பஞ்சத்தினாலே  மெலிந்து  போயிற்று.  (ஆதியாகமம்  47:13)

pagncham  migavum  kodithaayirunthathu;  theasamenggum  aagaaram  kidaiyaama’rpoayit’ru;  egipthutheasamum  kaanaan  theasamum  pagnchaththinaalea  melinthu  poayit’ru.  (aathiyaagamam  47:13)

யோசேப்பு  எகிப்து  தேசத்திலும்  கானான்  தேசத்திலுமுள்ள  பணத்தையெல்லாம்  தானியம்  கொண்டவர்களிடத்தில்  வாங்கி,  அதைப்  பார்வோன்  அரமனையிலே  கொண்டுபோய்ச்  சேர்த்தான்.  (ஆதியாகமம்  47:14)

yoaseappu  egipthu  theasaththilum  kaanaan  theasaththilumu'l'la  pa'naththaiyellaam  thaaniyam  ko'ndavarga'lidaththil  vaanggi,  athaip  paarvoan  aramanaiyilea  ko'ndupoaych  searththaan.  (aathiyaagamam  47:14)

எகிப்துதேசத்திலும்  கானான்தேசத்திலுமுள்ள  பணம்  செலவழிந்தபோது,  எகிப்தியர்  எல்லாரும்  யோசேப்பினிடத்தில்  வந்து:  எங்களுக்கு  ஆகாரம்  தாரும்;  பணம்  இல்லை,  அதினால்  நாங்கள்  உமது  சமுகத்தில்  சாகவேண்டுமோ  என்றார்கள்.  (ஆதியாகமம்  47:15)

egipthutheasaththilum  kaanaantheasaththilumu'l'la  pa'nam  selavazhinthapoathu,  egipthiyar  ellaarum  yoaseappinidaththil  vanthu:  engga'lukku  aagaaram  thaarum;  pa'nam  illai,  athinaal  naangga'l  umathu  samugaththil  saagavea'ndumoa  en’raarga'l.  (aathiyaagamam  47:15)

அதற்கு  யோசேப்பு:  உங்களிடத்தில்  பணம்  இல்லாமற்போனால்,  உங்கள்  ஆடுமாடுகளைக்  கொடுங்கள்;  அவைகளுக்குப்  பதிலாக  உங்களுக்குத்  தானியம்  கொடுக்கிறேன்  என்றான்.  (ஆதியாகமம்  47:16)

atha’rku  yoaseappu:  ungga'lidaththil  pa'nam  illaama’rpoanaal,  ungga'l  aadumaaduga'laik  kodungga'l;  avaiga'lukkup  bathilaaga  ungga'lukkuth  thaaniyam  kodukki’rean  en’raan.  (aathiyaagamam  47:16)

அவர்கள்  தங்கள்  ஆடுமாடு  முதலானவைகளை  யோசேப்பினிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  யோசேப்பு  குதிரைகளையும்  ஆடுகளையும்  மாடுகளையும்  கழுதைகளையும்  வாங்கிக்கொண்டு,  அந்த  வருஷம்  அவர்களுடைய  ஆடுமாடு  முதலான  எல்லாவற்றிற்கும்  பதிலாக  அவர்களுக்கு  ஆகாரம்  கொடுத்து,  அவர்களை  ஆதரித்தான்.  (ஆதியாகமம்  47:17)

avarga'l  thangga'l  aadumaadu  muthalaanavaiga'lai  yoaseappinidaththil  ko'nduvanthaarga'l;  yoaseappu  kuthiraiga'laiyum  aaduga'laiyum  maaduga'laiyum  kazhuthaiga'laiyum  vaanggikko'ndu,  antha  varusham  avarga'ludaiya  aadumaadu  muthalaana  ellaavat’ri’rkum  bathilaaga  avarga'lukku  aagaaram  koduththu,  avarga'lai  aathariththaan.  (aathiyaagamam  47:17)

அந்த  வருஷம்  முடிந்தபின்,  மறுவருஷத்திலே  அவர்கள்  அவனிடத்தில்  வந்து:  பணமும்  செலவழிந்துபோயிற்று;  எங்கள்  ஆடுமாடு  முதலானவைகளும்  எங்கள்  ஆண்டவனைச்  சேர்ந்தது;  எங்கள்  சரீரமும்  எங்கள்  நிலமுமே  ஒழிய,  எங்கள்  ஆண்டவனுக்கு  முன்பாக  மீதியானது  ஒன்றும்  இல்லை;  இது  எங்கள்  ஆண்டவனுக்குத்  தெரியாத  காரியம்  அல்ல.  (ஆதியாகமம்  47:18)

antha  varusham  mudinthapin,  ma’ruvarushaththilea  avarga'l  avanidaththil  vanthu:  pa'namum  selavazhinthupoayit’ru;  engga'l  aadumaadu  muthalaanavaiga'lum  engga'l  aa'ndavanaich  searnthathu;  engga'l  sareeramum  engga'l  nilamumea  ozhiya,  engga'l  aa'ndavanukku  munbaaga  meethiyaanathu  on’rum  illai;  ithu  engga'l  aa'ndavanukkuth  theriyaatha  kaariyam  alla.  (aathiyaagamam  47:18)

நாங்களும்  எங்கள்  நிலங்களும்  உம்முடைய  கண்களுக்கு  முன்பாக  அழிந்து  போகலாமா?  நீர்  எங்களையும்  எங்கள்  நிலங்களையும்  வாங்கிக்கொண்டு,  ஆகாரம்  கொடுக்கவேண்டும்;  நாங்களும்  எங்கள்  நிலங்களும்  பார்வோனுக்கு  ஆதீனமாயிருப்போம்;  நாங்கள்  சாகாமல்  உயிரோடிருக்கவும்,  நிலங்கள்  பாழாய்ப்போகாமலிருக்கவும்,  எங்களுக்கு  விதைத்  தானியத்தைத்  தாரும்  என்றார்கள்.  (ஆதியாகமம்  47:19)

naangga'lum  engga'l  nilangga'lum  ummudaiya  ka'nga'lukku  munbaaga  azhinthu  poagalaamaa?  neer  engga'laiyum  engga'l  nilangga'laiyum  vaanggikko'ndu,  aagaaram  kodukkavea'ndum;  naangga'lum  engga'l  nilangga'lum  paarvoanukku  aatheenamaayiruppoam;  naangga'l  saagaamal  uyiroadirukkavum,  nilangga'l  paazhaayppoagaamalirukkavum,  engga'lukku  vithaith  thaaniyaththaith  thaarum  en’raarga'l.  (aathiyaagamam  47:19)

அப்படியே  எகிப்தியர்  தங்களுக்குப்  பஞ்சம்  மேலிட்டபடியால்  அவரவர்  தங்கள்  தங்கள்  வயல்  நிலங்களை  விற்றார்கள்;  யோசேப்பு  எகிப்தின்  நிலங்கள்  யாவையும்  பார்வோனுக்காகக்  கொண்டான்;  இவ்விதமாய்  அந்தப்  பூமி  பார்வோனுடையதாயிற்று.  (ஆதியாகமம்  47:20)

appadiyea  egipthiyar  thangga'lukkup  pagncham  mealittapadiyaal  avaravar  thangga'l  thangga'l  vayal  nilangga'lai  vit’raarga'l;  yoaseappu  egipthin  nilangga'l  yaavaiyum  paarvoanukkaagak  ko'ndaan;  ivvithamaay  anthap  boomi  paarvoanudaiyathaayit’ru.  (aathiyaagamam  47:20)

மேலும்  அவன்  எகிப்தின்  ஒரு  எல்லை  முதல்  மறு  எல்லைவரைக்குமுள்ள  ஜனங்களை  அந்தந்தப்  பட்டணங்களில்  குடிமாறிப்போகப்பண்ணினான்.  (ஆதியாகமம்  47:21)

mealum  avan  egipthin  oru  ellai  muthal  ma’ru  ellaivaraikkumu'l'la  janangga'lai  anthanthap  patta'nangga'lil  kudimaa’rippoagappa'n'ninaan.  (aathiyaagamam  47:21)

ஆசாரியருடைய  நிலத்தை  மாத்திரம்  அவன்  கொள்ளவில்லை;  அது  பார்வோனாலே  ஆசாரியருக்கு  மானியமாகக்  கொடுக்கப்பட்டிருந்ததினாலும்,  பார்வோன்  அவர்களுக்குக்  கொடுத்த  மானியத்தினாலே  அவர்கள்  ஜீவனம்பண்ணிவந்ததினாலும்,  அவர்கள்  தங்கள்  நிலத்தை  விற்கவில்லை.  (ஆதியாகமம்  47:22)

aasaariyarudaiya  nilaththai  maaththiram  avan  ko'l'lavillai;  athu  paarvoanaalea  aasaariyarukku  maaniyamaagak  kodukkappattirunthathinaalum,  paarvoan  avarga'lukkuk  koduththa  maaniyaththinaalea  avarga'l  jeevanampa'n'nivanthathinaalum,  avarga'l  thangga'l  nilaththai  vi’rkavillai.  (aathiyaagamam  47:22)

பின்னும்  யோசேப்பு  ஜனங்களை  நோக்கி:  இதோ,  இன்று  உங்களையும்  உங்கள்  நிலங்களையும்  பார்வோனுக்காக  வாங்கிக்கொண்டேன்;  இதோ,  உங்களுக்குக்  கொடுக்கப்படுகிற  விதைத்தானியம்;  இதை  நிலத்தில்  விதையுங்கள்.  (ஆதியாகமம்  47:23)

pinnum  yoaseappu  janangga'lai  noakki:  ithoa,  in’ru  ungga'laiyum  ungga'l  nilangga'laiyum  paarvoanukkaaga  vaanggikko'ndean;  ithoa,  ungga'lukkuk  kodukkappadugi’ra  vithaiththaaniyam;  ithai  nilaththil  vithaiyungga'l.  (aathiyaagamam  47:23)

விளைவில்  ஐந்தில்  ஒரு  பங்கைப்  பார்வோனுக்குக்  கொடுக்கவேண்டும்;  மற்ற  நாலுபங்கும்  வயலுக்கு  விதையாகவும்  உங்களுக்கும்  உங்கள்  குடும்பத்தாருக்கும்  உங்கள்  குழந்தைகளுக்கும்  ஆகாரமாகவும்  உங்களுடையதாயிருக்கட்டும்  என்றான்.  (ஆதியாகமம்  47:24)

vi'laivil  ainthil  oru  panggaip  paarvoanukkuk  kodukkavea'ndum;  mat’ra  naalupanggum  vayalukku  vithaiyaagavum  ungga'lukkum  ungga'l  kudumbaththaarukkum  ungga'l  kuzhanthaiga'lukkum  aagaaramaagavum  ungga'ludaiyathaayirukkattum  en’raan.  (aathiyaagamam  47:24)

அப்பொழுது  அவர்கள்:  நீர்  எங்கள்  பிராணனைக்  காப்பாற்றினீர்;  எங்கள்  ஆண்டவனுடைய  கண்களில்  எங்களுக்குத்  தயவு  கிடைக்கவேண்டும்;  நாங்கள்  பார்வோனுக்கு  அடிமைகளாயிருக்கிறோம்  என்றார்கள்.  (ஆதியாகமம்  47:25)

appozhuthu  avarga'l:  neer  engga'l  piraa'nanaik  kaappaat’rineer;  engga'l  aa'ndavanudaiya  ka'nga'lil  engga'lukkuth  thayavu  kidaikkavea'ndum;  naangga'l  paarvoanukku  adimaiga'laayirukki’roam  en’raarga'l.  (aathiyaagamam  47:25)

ஐந்தில்  ஒன்று  பார்வோனுக்குச்  சேரும்  வாரம்  என்று  யோசேப்பு  இட்ட  கட்டளைப்படி  எகிப்து  தேசத்திலே  இந்நாள்வரைக்கும்  நடந்துவருகிறது;  ஆசாரியரின்  நிலம்  மாத்திரம்  பார்வோனைச்  சேராமல்  நீங்கலாயிருந்தது.  (ஆதியாகமம்  47:26)

ainthil  on’ru  paarvoanukkuch  searum  vaaram  en’ru  yoaseappu  itta  katta'laippadi  egipthu  theasaththilea  innaa'lvaraikkum  nadanthuvarugi’rathu;  aasaariyarin  nilam  maaththiram  paarvoanaich  searaamal  neenggalaayirunthathu.  (aathiyaagamam  47:26)

இஸ்ரவேலர்  எகிப்து  தேசத்திலுள்ள  கோசேன்  நாட்டிலே  குடியிருந்தார்கள்;  அங்கே  நிலங்களைக்  கையாட்சி  செய்து,  மிகவும்  பலுகிப்  பெருகினார்கள்.  (ஆதியாகமம்  47:27)

isravealar  egipthu  theasaththilu'l'la  koasean  naattilea  kudiyirunthaarga'l;  anggea  nilangga'laik  kaiyaadchi  seythu,  migavum  palugip  peruginaarga'l.  (aathiyaagamam  47:27)

யாக்கோபு  எகிப்து  தேசத்திலே  பதினேழு  வருஷம்  இருந்தான்;  யாக்கோபுடைய  ஆயுசுநாட்கள்  நூற்று  நாற்பத்தேழு  வருஷம்.  (ஆதியாகமம்  47:28)

yaakkoabu  egipthu  theasaththilea  pathineazhu  varusham  irunthaan;  yaakkoabudaiya  aayusunaadka'l  noot’ru  naa’rpaththeazhu  varusham.  (aathiyaagamam  47:28)

இஸ்ரவேல்  மரணமடையும்  காலம்  சமீபித்தது.  அப்பொழுது  அவன்  தன்  குமாரனாகிய  யோசேப்பை  வரவழைத்து,  அவனை  நோக்கி:  என்மேல்  உனக்குத்  தயவுண்டானால்,  உன்  கையை  என்  தொடையின்கீழ்  வைத்து  என்மேல்  பட்சமும்  உண்மையுமுள்ளவனாயிரு;  என்னை  எகிப்திலே  அடக்கம்பண்ணாதிருப்பாயாக.  (ஆதியாகமம்  47:29)

israveal  mara'namadaiyum  kaalam  sameebiththathu.  appozhuthu  avan  than  kumaaranaagiya  yoaseappai  varavazhaiththu,  avanai  noakki:  enmeal  unakkuth  thayavu'ndaanaal,  un  kaiyai  en  thodaiyinkeezh  vaiththu  enmeal  padchamum  u'nmaiyumu'l'lavanaayiru;  ennai  egipthilea  adakkampa'n'naathiruppaayaaga.  (aathiyaagamam  47:29)

நான்  என்  பிதாக்களோடே  படுத்துக்கொள்ளவேண்டும்;  ஆகையால்,  நீ  என்னை  எகிப்திலிருந்து  எடுத்துக்கொண்டுபோய்,  அவர்களை  அடக்கம்பண்ணியிருக்கிற  நிலத்திலே  என்னையும்  அடக்கம்பண்ணு  என்றான்.  அதற்கு  அவன்:  உமது  சொற்படி  செய்வேன்  என்றான்.  (ஆதியாகமம்  47:30)

naan  en  pithaakka'loadea  paduththukko'l'lavea'ndum;  aagaiyaal,  nee  ennai  egipthilirunthu  eduththukko'ndupoay,  avarga'lai  adakkampa'n'niyirukki’ra  nilaththilea  ennaiyum  adakkampa'n'nu  en’raan.  atha’rku  avan:  umathu  so’rpadi  seyvean  en’raan.  (aathiyaagamam  47:30)

அப்பொழுது  அவன்:  எனக்கு  ஆணையிட்டுக்கொடு  என்றான்;  அவனுக்கு  ஆணையிட்டுக்கொடுத்தான்.  அப்பொழுது  இஸ்ரவேல்  கட்டிலின்  தலைமாட்டிலே  சாய்ந்து  தொழுதுகொண்டான்.  (ஆதியாகமம்  47:31)

appozhuthu  avan:  enakku  aa'naiyittukkodu  en’raan;  avanukku  aa'naiyittukkoduththaan.  appozhuthu  israveal  kattilin  thalaimaattilea  saaynthu  thozhuthuko'ndaan.  (aathiyaagamam  47:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!