தேவனுடைய நாமமும்
உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன
நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் யாவரும்
தங்கள் எஜமான்களை எல்லாக்
கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள். (1தீமோத்தேயு
6:1)
theavanudaiya naamamum
ubatheasamum thooshikkappadaathapadikku, adimaiththana
nugaththi’rkudpattirukki’ra vealaikkaarar
yaavarum thangga'l ejamaanga'lai ellaak kanaththi’rkum paaththiraren’ru e'n'nikko'l'lakkadavarga'l. (1theemoaththeayu 6:1)
விசுவாசிகளாகிய எஜமான்களை
உடையவர்கள், தங்கள் எஜமான்கள்
சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டைபண்ணாமல், நல்வேலையின்
பலனைப் பெற்றுக்கொள்ளுகிற அவர்கள்
விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால், அவர்களுக்கு
அதிகமாய் ஊழியஞ்செய்யக்கடவர்கள்; இந்தப்படியே
போதித்துப் புத்திசொல்லு. (1தீமோத்தேயு
6:2)
visuvaasiga'laagiya ejamaanga'lai udaiyavarga'l, thangga'l ejamaanga'l sagoathararaayirukki’rathinaalea avarga'lai asattaipa'n'naamal, nalvealaiyin
palanaip pet’rukko'l'lugi’ra avarga'l visuvaasiga'lum piriyarumaayirukki’rapadiyaal, avarga'lukku athigamaay oozhiyagnseyyakkadavarga'l; inthappadiyea
poathiththup buththisollu. (1theemoaththeayu 6:2)
ஒருவன் நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான
வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான
உபதேசங்களைப் போதிக்கிறவனானால், (1தீமோத்தேயு
6:3)
oruvan nammudaiya
karththaraagiya iyeasuki’risthuvin aaroakkiyamaana vasanangga'laiyum, theavabakthikkeat’ra ubatheasangga'laiyum oppukko'l'laamal, veat’rumaiyaana ubatheasangga'laip poathikki’ravanaanaal, (1theemoaththeayu 6:3)
அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும்
அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே
பொறாமையும், சண்டையும், தூஷணங்களும்,
பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, (1தீமோத்தேயு
6:4)
avan i’rumaappu'l'lavanum, on’rum a’riyaathavanum, tharkkangga'laiyum vaakkuvaathangga'laiyumpat’ri noayko'ndavanumaayirukki’raan; avaiga'laalea po’raamaiyum, sa'ndaiyum, thoosha'nangga'lum, pollaatha samsayangga'lumu'ndaagi, (1theemoaththeayu 6:4)
கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை
ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால்
உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும்
பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு
விலகு. (1தீமோத்தேயு 6:5)
ketta sinthaiyu'l'lavarga'lum saththiyamillaathavarga'lum theavabakthiyai aathaayaththozhilen’ru e'n'nugi’ravarga'lumaayirukki’ra manusharga'laal u'ndaagum maa’rupaadaana tharkkangga'lum pi’rakkum; ippadippattavarga'lai vittu vilagu. (1theemoaththeayu 6:5)
போதுமென்கிற மனதுடனே
கூடிய தேவபக்தியே மிகுந்த
ஆதாயம். (1தீமோத்தேயு 6:6)
poathumengi’ra manathudanea koodiya
theavabakthiyea miguntha aathaayam.
(1theemoaththeayu 6:6)
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து
நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது
நிச்சயம். (1தீமோத்தேயு 6:7)
ulagaththilea naam on’rum ko'nduvanthathumillai, ithilirunthu
naam on’rum ko'ndupoavathumillai enbathu nichchayam. (1theemoaththeayu 6:7)
உண்ணவும் உடுக்கவும்
நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.
(1தீமோத்தேயு 6:8)
u'n'navum udukkavum
namakku u'ndaayirunthaal athu poathumen’rirukkak kadavoam. (1theemoaththeayu 6:8)
ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும்
கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும்
அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும்
சேதமுமான பலவித இச்சைகளிலும்
விழுகிறார்கள். (1தீமோத்தேயு 6:9)
aisuvariyavaanga'laaga virumbugi’ravarga'l soathanaiyilum ka'n'niyilum,
manusharaik keattilum azhivilum amizhththugi’ra mathikeadum
seathamumaana palavitha ichchaiga'lilum vizhugi’raarga'l. (1theemoaththeayu 6:9)
பண ஆசை எல்லாத் தீமைக்கும்
வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி,
அநேக வேதனைகளாலே தங்களை
உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். (1தீமோத்தேயு
6:10)
pa'na aasai ellaath
theemaikkum vearaayirukki’rathu; silar athai ichchiththu, visuvaasaththaivittu vazhuvi,
aneaga
veathanaiga'laalea thangga'lai uruvak
kuththikko'ndirukki’raarga'l. (1theemoaththeayu 6:10)
நீயோ, தேவனுடைய
மனுஷனே, இவைகளை விட்டோடி,
நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும்
பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி
நாடு. (1தீமோத்தேயு 6:11)
neeyoa, theavanudaiya
manushanea, ivaiga'lai vittoadi, neethiyaiyum theavabakthiyaiyum visuvaasaththaiyum anbaiyum po’rumaiyaiyum saanthaku'naththaiyum adaiyumpadi
naadu. (1theemoaththeayu 6:11)
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு,
நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே
நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக
நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். (1தீமோத்தேயு
6:12)
visuvaasaththin nalla poaraattaththaip poaraadu, niththiyajeevanaip pat’rikko'l; atha’rkaagavea nee azhaikkappattaay; aneaga saadchiga'lukku munbaaga nalla a’rikkai pa'n'ninavanumaayirukki’raay. (1theemoaththeayu 6:12)
நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை
மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு, (1தீமோத்தேயு
6:13)
nammudaiya karththaraagiya iyeasuki’risthu pirasannamaagumvaraikkum, nee inthak ka’rpanaiyai maasillaamalum kut’ramillaamalum kaikko'l'lumpadikku, (1theemoaththeayu 6:13)
எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற
தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று
நல்ல அறிக்கையைச் சாட்சியாக
விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய
சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். (1தீமோத்தேயு
6:14)
ellaavat’raiyum uyiroadirukkach seygi’ra theavanudaiya
sannithaanaththileayum, ponthiyupilaaththuvin munnin’ru nalla a’rikkaiyaich saadchiyaaga vi'langgappa'n'nina ki’risthu iyeasuvinudaiya sannithaanaththileayum unakkuk
katta'laiyidugi’rean. (1theemoaththeayu 6:14)
அந்தப் பிரசன்னமாகுதலைத் தேவன் தம்முடைய காலங்களில்
வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி
ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
(1தீமோத்தேயு 6:15)
anthap pirasannamaaguthalaith theavan thammudaiya
kaalangga'lil ve'lippaduththuvaar. avarea
niththiyaananthamu'l'la eaga sakkaraathibathiyum, raajaathi
raajaavum, karththaathi karththaavum,
(1theemoaththeayu 6:15)
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத
ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில்
ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே
கனமும் நித்திய வல்லமையும்
உண்டாயிருப்பதாக. ஆமென். (1தீமோத்தேயு
6:16)
oruvaraay, saavaamaiyu'l'lavarum, searakkoodaatha o'liyil
vaasampa'n'nugi’ravarum, manusharil
oruvarum ka'ndiraathavarum, kaa'nakkoodaathavarumaayirukki’ravar; avarukkea kanamum
niththiya vallamaiyum u'ndaayiruppathaaga. aamen.
(1theemoaththeayu 6:16)
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான
சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை
வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித
நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க்
கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல்
நம்பிக்கை வைக்கவும், (1தீமோத்தேயு
6:17)
ivvulagaththilea aisuvariyamu'l'lavarga'l i’rumaappaana sinthaiyu'l'lavarga'laayiraamalum,
nilaiyat’ra aisuvariyaththinmeal nambikkai vaiyaamalum,
naam anubavikki’ratha’rkuch sagalavitha nanmaiga'laiyum namakkuch sampoora'namaayk
kodukki’ra jeevanu'l'la
theavanmeal nambikkai vaikkavum, (1theemoaththeayu 6:17)
நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க்
கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், (1தீமோத்தேயு
6:18)
nanmaiseyyavum, na’rkiriyaiga'lil aisuvariyavaanga'laagavum, thaaraa'lamaayk kodukki’ravarga'lum, uthaaraku'namu'l'lavarga'lumaayirukkavum,
(1theemoaththeayu 6:18)
நித்திய ஜீவனைப்
பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு
நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக
வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
(1தீமோத்தேயு 6:19)
niththiya jeevanaip
pat’rikko'l'lumpadi varungkaalaththi’rkaagath thangga'lukku nalla aathaaraththaip pokkishamaaga vaikkavum
avarga'lukkuk katta'laiyidu. (1theemoaththeayu 6:19)
ஓ தீமோத்தேயுவே,
உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான
வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப்
பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
(1தீமோத்தேயு 6:20)
oa theemoaththeayuvea, unnidaththil
oppuvikkappattathai nee kaaththukko'ndu, seerkeadaana vee'npeachchuga'lukkum, gnaanamen’ru poyyaayp
pearpet’rirukki’ra ko'lgaiyin vibareethangga'lukkum vilagu. (1theemoaththeayu 6:20)
சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது
உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.
(1தீமோத்தேயு 6:21)
silar athaip paaraatti, visuvaasaththaivittu vazhuvippoanaarga'l. kirubaiyaanathu unnoadeakooda
iruppathaaga. aamen.
(1theemoaththeayu 6:21)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!