நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும்,
நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
(1தீமோத்தேயு 1:1)
nammudaiya iradchagaraayirukki’ra theavanum, nammudaiya
nambikkaiyaayirukki’ra karththaraagiya iyeasuki’risthuvum katta'laiyittapadiyea, iyeasuki’risthuvin appoasthalanaayirukki’ra pavul,
(1theemoaththeayu 1:1)
விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய
பிதாவாகிய தேவனாலும் நம்முடைய
கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும்
கிருபையும் இரக்கமும் சமாதானமும்
உண்டாவதாக. (1தீமோத்தேயு 1:2)
visuvaasaththil uththama
kumaaranaagiya theemoaththeayuvukku ezhuthugi’rathaavathu: nammudaiya
pithaavaagiya theavanaalum
nammudaiya karththaraagiya ki’risthu iyeasuvinaalum kirubaiyum irakkamum samaathaanamum u'ndaavathaaga. (1theemoaththeayu 1:2)
வேற்றுமையான உபதேசங்களைப்
போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும்
தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல்,
தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத
வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக, (1தீமோத்தேயு
1:3)
veat’rumaiyaana ubatheasangga'laip poathiyaathapadikkum, visuvaasaththinaal vi'langgum theyveega bakthiviruththikku
eathuvaayiraamal, tharkkangga'lukku eathuvaayirukki’ra kattukkathaiga'laiyum mudivillaatha
vamsavaralaa’ruga'laiyum kavaniyaathapadikkum, nee silarukkuk katta'laiyidumporuttaaga, (1theemoaththeayu 1:3)
நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது
உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக.
(1தீமோத்தேயு 1:4)
naan makkethoaniyaavukkup poagumpoathu unnai ebeasu patta'naththilirukka
vea'ndikko'ndapadiyea seyvaayaaga. (1theemoaththeayu 1:4)
கற்பனையின் பொருள்
என்னவெனில், சுத்தமான இருதயத்திலும்
நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும்
அன்பே. (1தீமோத்தேயு 1:5)
ka’rpanaiyin poru'l ennavenil,
suththamaana iruthayaththilum nalmanachsaadchiyilum maayamat’ra visuvaasaththilum pi’rakkum anbea. (1theemoaththeayu 1:5)
இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து
விலகிப்போனார்கள். (1தீமோத்தேயு 1:6)
ivaiga'laich silar noakkaamal
vee'npeachchukku idangkoduththu vilagippoanaarga'l. (1theemoaththeayu 1:6)
தாங்கள் சொல்லுகிறது
இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது
இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண
போதகராயிருக்க விரும்புகிறார்கள். (1தீமோத்தேயு
1:7)
thaangga'l sollugi’rathu innathen’rum, thaangga'l saathikki’rathu innathen’rum a’riyaathirunthum,
niyaayappiramaa'na poathagaraayirukka virumbugi’raarga'l. (1theemoaththeayu 1:7)
ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி
அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று
அறிந்திருக்கிறோம். (1தீமோத்தேயு 1:8)
oruvan niyaayappiramaa'naththai niyaayappadi
anusariththaal, niyaayappiramaa'nam nallathen’ru a’rinthirukki’roam. (1theemoaththeayu 1:8)
எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு
விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும், (1தீமோத்தேயு
1:9)
engga'lukkuth therinthirukki’rapadi, niyaayappiramaa'nam neethimaanukku vithikkappadaamal, akkiramakkaararukkum, adanggaathavarga'lukkum, bakthiyillaathavarga'lukkum, paaviga'lukkum, asuththarukkum, seerkettavarga'lukkum, thaaythagappanmaarai adikki’ravarga'lukkum, kolaipaathagarukkum, (1theemoaththeayu 1:9)
வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத்
திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை
இடுகிறவர்களுக்கும், (1தீமோத்தேயு 1:10)
veasikka'l'larukkum,
aa'npu'narchchikkaararukkum, manusharaith
thirudugi’ravarga'lukkum, poyyarukkum,
poyyaa'nai idugi’ravarga'lukkum, (1theemoaththeayu 1:10)
நித்தியானந்த தேவனுடைய
மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு
ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு
எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும்
விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது. (1தீமோத்தேயு
1:11)
niththiyaanantha theavanudaiya
magimaiyaana suviseashaththinpadi
enakku oppuvikkappattirukki’ra aaroakkiyamaana ubatheasaththi’rku ethiridaiyaayirukki’ra mat’renthach seygaikkum viroathamaay
vithikkappattirukki’rathu. (1theemoaththeayu 1:11)
என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். (1தீமோத்தேயு
1:12)
ennaip balappaduththugi’ra nammudaiya karththaraagiya iyeasuki’risthu ennai u'nmaiyu'l'lavanen’re'n'ni, intha oozhiyaththi’rku ea’rpaduththinapadiyaal,
avarai sthoaththirikki’rean. (1theemoaththeayu 1:12)
முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை
செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச்
செய்தபடியினால் இரக்கம்பெற்றேன். (1தீமோத்தேயு
1:13)
munnea naan thooshikki’ravanum, thunbappaduththugi’ravanum, kodumai
seygi’ravanumaayirunthean; appadiyirunthum, naan a’riyaamal avisuvaasaththinaalea appadich seythapadiyinaal irakkampet’rean. (1theemoaththeayu 1:13)
நம்முடைய கர்த்தரின்
கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட
என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.
(1தீமோத்தேயு 1:14)
nammudaiya karththarin
kirubai
ki’risthu
iyeasuvinmealu'l'la visuvaasaththoadum anboadungkooda ennidaththil paripoora'namaayp perugit’ru. (1theemoaththeayu 1:14)
பாவிகளை இரட்சிக்க
கிறிஸ்து இயேசு உலகத்தில்
வந்தார் என்கிற வார்த்தை
உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில்
பிரதான பாவி நான். (1தீமோத்தேயு 1:15)
paaviga'lai iradchikka ki’risthu iyeasu ulagaththil vanthaar engi’ra vaarththai
u'nmaiyum ellaa anggigarippukkum paaththiramumaanathu; avarga'lil pirathaana
paavi naan. (1theemoaththeayu 1:15)
அப்படியிருந்தும், நித்திய
ஜீவனை அடையும்படி இனிமேல்
இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம்
உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய
என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும்
காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன். (1தீமோத்தேயு
1:16)
appadiyirunthum, niththiya
jeevanai adaiyumpadi inimeal
iyeasuki’risthuvinidaththil visuvaasamaayiruppavarga'lukkuth thirushdaantham u'ndaagumporuttup pirathaana paaviyaagiya ennidaththil
avar ellaa neediya
po’rumaiyaiyum kaa'nbikkumpadikku irakkampet’rean. (1theemoaththeayu 1:16)
நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள
ராஜனுமாய், தாம் ஒருவரே
ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும்
மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
(1தீமோத்தேயு 1:17)
niththiyamum azhivillaamaiyum atharisanamumu'l'la raajanumaay,
thaam oruvarea gnaanamu'l'la
theavanumaayirukki’ravarukku, kanamum
magimaiyum sathaakaalangga'lilum u'ndaayiruppathaaga. aamen. (1theemoaththeayu 1:17)
குமாரனாகிய தீமோத்தேயுவே,
உன்னைக்குறித்து முன் உண்டான
தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை
முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக்
கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.
(1தீமோத்தேயு 1:18)
kumaaranaagiya theemoaththeayuvea, unnaikku’riththu mun u'ndaana theerkkatharisanangga'linpadiyea, nee avaiga'lai munnittu nalla poaraattampa'n'numpadi,
inthak katta'laiyai unakku
oppuvikki’rean; nee visuvaasamum nalmanachsaadchiyum udaiyavanaayiru. (1theemoaththeayu 1:18)
இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய
கப்பலைச் சேதப்படுத்தினார்கள். (1தீமோத்தேயு
1:19)
intha nalmanachsaadchiyaich silar tha'l'livittu, visuvaasamaagiya kappalaich seathappaduththinaarga'l. (1theemoaththeayu 1:19)
இமெனேயும் அலெக்சந்தரும்
அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி
சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன். (1தீமோத்தேயு
1:20)
imeneayum aleksantharum appadippattavarga'l; avarga'l thooshiyaathapadi sidchikkappada avarga'laich saaththaanidaththil oppukkoduththean. (1theemoaththeayu 1:20)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!