Monday, May 02, 2016

Maa’rku 13 | மாற்கு 13 | Mark 13

அவர்  தேவாலயத்தை  விட்டுப்  புறப்படும்போது,  அவருடைய  சீஷர்களில்  ஒருவன்  அவரை  நோக்கி:  போதகரே,  இதோ,  இந்தக்  கல்லுகள்  எப்படிப்பட்டது!  இந்தக்  கட்டடங்கள்  எப்படிப்பட்டது!  பாரும்  என்றான்.  (மாற்கு  13:1)

avar  theavaalayaththai  vittup  pu’rappadumpoathu,  avarudaiya  seesharga'lil  oruvan  avarai  noakki:  poathagarea,  ithoa,  inthak  kalluga'l  eppadippattathu!  inthak  kattadangga'l  eppadippattathu!  paarum  en’raan.  (maa’rku  13:1)

இயேசு  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  இந்தப்  பெரிய  கட்டடங்களைக்  காண்கிறாயே,  ஒரு  கல்லின்மேல்  ஒரு  கல்லிராதபடிக்கு  எல்லாம்  இடிக்கப்பட்டுப்போகும்  என்றார்.  (மாற்கு  13:2)

iyeasu  avanukkup  pirathiyuththaramaaga:  inthap  periya  kattadangga'laik  kaa'ngi’raayea,  oru  kallinmeal  oru  kalliraathapadikku  ellaam  idikkappattuppoagum  en’raar.  (maa’rku  13:2)

பின்பு,  அவர்  தேவாலயத்துக்கு  எதிராக  ஒலிவமலையின்மேல்  உட்கார்ந்திருக்கையில்,  பேதுருவும்  யாக்கோபும்  யோவானும்  அந்திரேயாவும்  அவரிடத்தில்  தனித்துவந்து:  (மாற்கு  13:3)

pinbu,  avar  theavaalayaththukku  ethiraaga  olivamalaiyinmeal  udkaarnthirukkaiyil,  peathuruvum  yaakkoabum  yoavaanum  anthireayaavum  avaridaththil  thaniththuvanthu:  (maa’rku  13:3)

இவைகள்  எப்பொழுது  சம்பவிக்கும்?  இவைகளெல்லாம்  நிறைவேறுங்காலத்துக்கு  அடையாளம்  என்ன?  எங்களுக்குச்  சொல்லவேண்டும்  என்றார்கள்.  (மாற்கு  13:4)

ivaiga'l  eppozhuthu  sambavikkum?  ivaiga'lellaam  ni’raivea'rungkaalaththukku  adaiyaa'lam  enna?  engga'lukkuch  sollavea'ndum  en’raarga'l.  (maa’rku  13:4)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  ஒருவனும்  உங்களை  வஞ்சியாதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்.  (மாற்கு  13:5)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  oruvanum  ungga'lai  vagnchiyaathapadikku  echcharikkaiyaayirungga'l.  (maa’rku  13:5)

ஏனெனில்  அநேகர்  வந்து,  என்  நாமத்தைக்கொண்டு:  நானே  கிறிஸ்து  என்று  சொல்லி,  அநேகரை  வஞ்சிப்பார்கள்.  (மாற்கு  13:6)

eanenil  aneagar  vanthu,  en  naamaththaikko'ndu:  naanea  ki'risthu  en'ru  solli,  aneagarai  vagnchippaarga'l.  (maa’rku  13:6)

யுத்தங்களையும்  யுத்தங்களின்  செய்திகளையும்  கேள்விப்படும்போது  கலங்காதேயுங்கள்;  இவைகள்  சம்பவிக்கவேண்டியதே.  ஆனாலும்,  முடிவு  உடனே  வராது.  (மாற்கு  13:7)

yuththangga'laiyum  yuththangga'lin  seythiga'laiyum  kea'lvippadumpoathu  kalanggaatheayungga'l;  ivaiga'l  sambavikkavea'ndiyathea.  aanaalum,  mudivu  udanea  varaathu.  (maa’rku  13:7)

ஜனத்துக்கு  விரோதமாய்  ஜனமும்,  ராஜ்யத்துக்கு  விரோதமாய்  ராஜ்யமும்  எழும்பும்;  பூமியதிர்ச்சிகளும்  பல  இடங்களில்  உண்டாகும்,  பஞ்சங்களும்  கலகங்களும்  உண்டாகும்;  இவைகள்  வேதனைகளுக்கு  ஆரம்பம்.  (மாற்கு  13:8)

janaththukku  viroathamaay  janamum,  raajyaththukku  viroathamaay  raajyamum  ezhumbum;  boomiyathirchchiga'lum  pala  idangga'lil  u'ndaagum,  pagnchangga'lum  kalagangga'lum  u'ndaagum;  ivaiga'l  veathanaiga'lukku  aarambam.  (maa’rku  13:8)

நீங்களோ  எச்சரிக்கையாயிருங்கள்,  ஏனெனில்  உங்களை  ஆலோசனைச்  சங்கங்களுக்கு  ஒப்புக்கொடுப்பார்கள்,  நீங்கள்  ஜெபஆலயங்களில்  அடிக்கப்படுவீர்கள்;  என்னிமித்தம்  தேசாதிபதிகளுக்கும்  ராஜாக்களுக்கும்  சாட்சியாக  அவர்களுக்கு  முன்பாக  நிறுத்தப்படுவீர்கள்.  (மாற்கு  13:9)

neengga'loa  echcharikkaiyaayirungga'l,  eanenil  ungga'lai  aaloasanaich  sanggangga'lukku  oppukkoduppaarga'l,  neengga'l  jebaaalayangga'lil  adikkappaduveerga'l;  ennimiththam  theasaathibathiga'lukkum  raajaakka'lukkum  saadchiyaaga  avarga'lukku  munbaaga  ni'ruththappaduveerga'l.  (maa’rku  13:9)

சகல  ஜாதிகளுக்கும்  சுவிசேஷம்  முந்திப்  பிரசங்கிக்கப்படவேண்டும்.  (மாற்கு  13:10)

sagala  jaathiga'lukkum  suviseasham  munthip  pirasanggikkappadavea'ndum.  (maa’rku  13:10)

அவர்கள்  உங்களைக்  கொண்டுபோய்  ஒப்புக்கொடுக்கும்போது,  நீங்கள்  என்ன  பேசுவோமென்று  முன்னதாகக்  கவலைப்படாமலும்  சிந்தியாமலுமிருங்கள்;  அந்த  நாழிகையிலே  உங்களுக்கு  எது  அருள்  செய்யப்படுமோ  அதையே  பேசுங்கள்;  ஏனெனில்  பேசுகிறவர்கள்  நீங்களல்ல,  பரிசுத்த  ஆவியே  பேசுகிறவர்.  (மாற்கு  13:11)

avarga'l  ungga'laik  ko'ndupoay  oppukkodukkumpoathu,  neengga'l  enna  peasuvoamen'ru  munnathaagak  kavalaippadaamalum  sinthiyaamalumirungga'l;  antha  naazhigaiyilea  ungga'lukku  ethu  aru'l  seyyappadumoa  athaiyea  peasungga'l;  eanenil  peasugi’ravarga'l  neengga'lalla,  parisuththa  aaviyea  peasugi’ravar.  (maa’rku  13:11)

அன்றியும்  சகோதரன்  சகோதரனையும்,  தகப்பன்  பிள்ளையையும்  மரணத்துக்கு  ஒப்புக்கொடுப்பார்கள்;  பெற்றாருக்கு  விரோதமாகப்  பிள்ளைகள்  எழும்பி,  அவர்களைக்  கொலைசெய்வார்கள்.  (மாற்கு  13:12)

an’riyum  sagoatharan  sagoatharanaiyum,  thagappan  pi'l'laiyaiyum  mara'naththukku  oppukkoduppaarga'l;  pet’raarukku  viroathamaagap  pi'l'laiga'l  ezhumbi,  avarga'laik  kolaiseyvaarga'l.  (maa’rku  13:12)

என்  நாமத்தினிமித்தம்  எல்லாராலும்  பகைக்கப்படுவீர்கள்.  முடிவுபரியந்தம்  நிலைநிற்பவனே  இரட்சிக்கப்படுவான்.  (மாற்கு  13:13)

en  naamaththinimiththam  ellaaraalum  pagaikkappaduveerga'l.  mudivupariyantham  nilaini’rpavanea  iradchikkappaduvaan.  (maa’rku  13:13)

மேலும்  பாழாக்குகிற  அருவருப்பைக்குறித்துத்  தானியேல்  தீர்க்கதரிசி  சொல்லியிருக்கிறானே;  வாசிக்கிறவன்  சிந்திக்கக்கடவன்;  அது  நிற்கத்தகாத  இடத்திலே  நீங்கள்  அதை  நிற்கக்  காணும்போது,  யூதேயாவில்  இருக்கிறவர்கள்  மலைகளுக்கு  ஓடிப்போகக்கடவர்கள்.  (மாற்கு  13:14)

mealum  paazhaakkugi’ra  aruvaruppaikku’riththuth  thaaniyeal  theerkkatharisi  solliyirukki’raanea;  vaasikki’ravan  sinthikkakkadavan;  athu  ni’rkaththagaatha  idaththilea  neengga'l  athai  ni’rkak  kaa'numpoathu,  yootheayaavil  irukki’ravarga'l  malaiga'lukku  oadippoagakkadavarga'l.  (maa’rku  13:14)

வீட்டின்மேல்  இருக்கிறவன்  தன்  வீட்டுக்குள்  இறங்காமலும்,  தன்  வீட்டில்  எதையாகிலும்  எடுத்துக்கொள்ள  உள்ளே  போகாமலும்  இருக்கக்கடவன்.  (மாற்கு  13:15)

veettinmeal  irukki’ravan  than  veettukku'l  i’ranggaamalum,  than  veettil  ethaiyaagilum  eduththukko'l'la  u'l'lea  poagaamalum  irukkakkadavan.  (maa’rku  13:15)

வயலில்  இருக்கிறவன்  தன்  வஸ்திரத்தை  எடுப்பதற்குப்  பின்னிட்டுத்  திரும்பாதிருக்கக்கடவன்.  (மாற்கு  13:16)

vayalil  irukki’ravan  than  vasthiraththai  eduppatha’rkup  pinnittuth  thirumbaathirukkakkadavan.  (maa’rku  13:16)

அந்நாட்களிலே  கர்ப்பவதிகளுக்கும்  பால்கொடுக்கிறவர்களுக்கும்  ஐயோ!  (மாற்கு  13:17)

annaadka'lilea  karppavathiga'lukkum  paalkodukki’ravarga'lukkum  aiyoa!  (maa’rku  13:17)

நீங்கள்  ஓடிப்போவது  மாரிகாலத்திலே  சம்பவியாதபடிக்கு  வேண்டிக்கொள்ளுங்கள்.  (மாற்கு  13:18)

neengga'l  oadippoavathu  maarikaalaththilea  sambaviyaathapadikku  vea'ndikko'l'lungga'l.  (maa’rku  13:18)

ஏனெனில்  தேவன்  உலகத்தைச்  சிருஷ்டித்ததுமுதல்  இதுவரைக்கும்  சம்பவித்திராததும்,  இனிமேலும்  சம்பவியாததுமான  உபத்திரவம்  அந்நாட்களில்  உண்டாயிருக்கும்.  (மாற்கு  13:19)

eanenil  theavan  ulagaththaich  sirushdiththathumuthal  ithuvaraikkum  sambaviththiraathathum,  inimealum  sambaviyaathathumaana  ubaththiravam  annaadka'lil  u'ndaayirukkum.  (maa’rku  13:19)

கர்த்தர்  அந்நாட்களைக்  குறைத்திராவிட்டால்,  ஒருவனாகிலும்  தப்பிப்போவதில்லை;  தாம்  தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ,  அவர்  அந்த  நாட்களைக்  குறைத்திருக்கிறார்.  (மாற்கு  13:20)

karththar  annaadka'laik  ku’raiththiraavittaal,  oruvanaagilum  thappippoavathillai;  thaam  therinthuko'ndavarga'linimiththamoa,  avar  antha  naadka'laik  ku’raiththirukki’raar.  (maa’rku  13:20)

அப்பொழுது:  இதோ,  கிறிஸ்து  இங்கே  இருக்கிறார்,  அதோ,  அங்கேயிருக்கிறார்  என்று  எவனாகிலும்  சொன்னால்,  நம்பாதேயுங்கள்.  (மாற்கு  13:21)

appozhuthu:  ithoa,  ki’risthu  inggea  irukki’raar,  athoa,  anggeayirukki’raar  en'ru  evanaagilum  sonnaal,  nambaatheayungga'l.  (maa’rku  13:21)

ஏனெனில்  கள்ளக்கிறிஸ்துக்களும்  கள்ளத்தீர்க்கதரிசிகளும்  எழும்பி,  கூடுமானால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும்  வஞ்சிக்கத்தக்கதாக  அடையாளங்களையும்  அற்புதங்களையும்  செய்வார்கள்.  (மாற்கு  13:22)

eanenil  ka'l'lakki’risthukka'lum  ka'l'laththeerkkatharisiga'lum  ezhumbi,  koodumaanaal  therinthuko'l'lappattavarga'laiyum  vagnchikkaththakkathaaga  adaiyaa'langga'laiyum  a’rputhangga'laiyum  seyvaarga'l.  (maa’rku  13:22)

நீங்களோ  எச்சரிக்கையாயிருங்கள்;  இதோ,  எல்லாவற்றையும்  முன்னதாக  உங்களுக்கு  அறிவித்திருக்கிறேன்.  (மாற்கு  13:23)

neengga'loa  echcharikkaiyaayirungga'l;  ithoa,  ellaavat’raiyum  munnathaaga  ungga'lukku  a’riviththirukki'rean.  (maa’rku  13:23)

அந்நாட்களிலே,  அந்த  உபத்திரவத்திற்குப்  பின்பு,  சூரியன்  அந்தகாரப்படும்,  சந்திரன்  ஒளியைக்  கொடாதிருக்கும்;  (மாற்கு  13:24)

annaadka'lilea,  antha  ubaththiravaththi’rkup  pinbu,  sooriyan  anthagaarappadum,  santhiran  o'liyaik  kodaathirukkum;  (maa’rku  13:24)

வானத்தின்  நட்சத்திரங்கள்  விழும்,  வானங்களிலுள்ள  சத்துவங்களும்  அசைக்கப்படும்.  (மாற்கு  13:25)

vaanaththin  nadchaththirangga'l  vizhum,  vaanangga'lilu'l'la  saththuvangga'lum  asaikkappadum.  (maa’rku  13:25)

அப்பொழுது  மனுஷகுமாரன்  மிகுந்த  வல்லமையோடும்  மகிமையோடும்  மேகங்களின்மேல்  வருகிறதைக்  காண்பார்கள்.  (மாற்கு  13:26)

appozhuthu  manushakumaaran  miguntha  vallamaiyoadum  magimaiyoadum  meagangga'linmeal  varugi’rathaik  kaa'nbaarga'l.  (maa’rku  13:26)

அப்பொழுது  அவர்  தம்முடைய  தூதரை  அனுப்பி,  தாம்  தெரிந்துகொண்டவர்களைப்  பூமியின்  கடைமுனை  முதற்கொண்டு,  வானத்தின்  கடைமுனைமட்டுமுள்ள  நாலு  திசைகளிலுமிருந்து  கூட்டிச்  சேர்ப்பார்.  (மாற்கு  13:27)

appozhuthu  avar  thammudaiya  thootharai  anuppi,  thaam  therinthuko'ndavarga'laip  boomiyin  kadaimunai  mutha’rko'ndu,  vaanaththin  kadaimunaimattumu'l'la  naalu  thisaiga'lilumirunthu  koottich  searppaar.  (maa’rku  13:27)

அத்திமரத்தினால்  ஒரு  உவமையைக்  கற்றுக்கொள்ளுங்கள்;  அதிலே  இளங்கிளை  தோன்றி,  துளிர்விடும்போது,  வசந்தகாலம்  சமீபமாயிற்று  என்று  அறிவீர்கள்.  (மாற்கு  13:28)

aththimaraththinaal  oru  uvamaiyaik  kat’rukko'l'lungga'l;  athilea  i'langki'lai  thoan’ri,  thu'lirvidumpoathu,  vasanthakaalam  sameebamaayit’ru  en'ru  a’riveerga'l.  (maa’rku  13:28)

அப்படியே  இவைகள்  சம்பவிக்கிறதை  நீங்கள்  காணும்போது,  அவர்  சமீபமாய்  வாசலருகே  வந்திருக்கிறார்  என்று  அறியுங்கள்.  (மாற்கு  13:29)

appadiyea  ivaiga'l  sambavikki’rathai  neengga'l  kaa'numpoathu,  avar  sameebamaay  vaasalarugea  vanthirukki’raar  en'ru  a’riyungga'l.  (maa’rku  13:29)

இவைகளெல்லாம்  சம்பவிக்கும்  முன்னே  இந்தச்  சந்ததி  ஒழிந்துபோகாதென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (மாற்கு  13:30)

ivaiga'lellaam  sambavikkum  munnea  inthach  santhathi  ozhinthupoagaathen'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean.  (maa’rku  13:30)

வானமும்  பூமியும்  ஒழிந்துபோம்,  என்  வார்த்தைகளோ  ஒழிந்துபோவதில்லை.  (மாற்கு  13:31)

vaanamum  boomiyum  ozhinthupoam,  en  vaarththaiga'loa  ozhinthupoavathillai.  (maa’rku  13:31)

அந்த  நாளையும்  அந்த  நாழிகையையும்  பிதா  ஒருவர்  தவிர  மற்றொருவனும்  அறியான்,  பரலோகத்திலுள்ள  தூதர்களும்  அறியார்கள்,  குமாரனும்  அறியார்.  (மாற்கு  13:32)

antha  naa'laiyum  antha  naazhigaiyaiyum  pithaa  oruvar  thavira  mat’roruvanum  a’riyaan,  paraloagaththilu'l'la  thootharga'lum  a’riyaarga'l,  kumaaranum  a’riyaar.  (maa’rku  13:32)

அக்காலத்தை  நீங்கள்  அறியாதபடியால்  எச்சரிக்கையாயிருங்கள்,  விழித்திருந்து  ஜெபம்பண்ணுங்கள்.  (மாற்கு  13:33)

akkaalaththai  neengga'l  a’riyaathapadiyaal  echcharikkaiyaayirungga'l,  vizhiththirunthu  jebampa'n'nungga'l.  (maa’rku  13:33)

ஒரு  மனுஷன்  தன்  வீட்டைவிட்டு,  புறத்தேசத்துக்குப்  பிரயாணம்போக  எத்தனிக்கும்போது,  தன்  ஊழியக்காரருக்கு  அதிகாரங்கொடுத்து,  அவனவனுக்குத்  தன்  தன்  வேலையையும்  நியமித்து,  விழித்திருக்கும்படிக்குக்  காவல்காக்கிறவனுக்குக்  கற்பிப்பான்.  (மாற்கு  13:34)

oru  manushan  than  veettaivittu,  pu’raththeasaththukkup  pirayaa'nampoaga  eththanikkumpoathu,  than  oozhiyakkaararukku  athigaarangkoduththu,  avanavanukkuth  than  than  vealaiyaiyum  niyamiththu,  vizhiththirukkumpadikkuk  kaavalkaakki’ravanukkuk  ka’rpippaan.  (maa’rku  13:34)

அப்படியே  நீங்களும்  விழித்திருங்கள்;  ஏனெனில்,  வீட்டெஜமான்  சாயங்காலத்திலோ,  நடுராத்திரியிலோ,  சேவல்  கூவும்  நேரத்திலோ,  காலையிலோ,  எப்பொழுது  வருவான்  என்று  நீங்கள்  அறியீர்கள்.  (மாற்கு  13:35)

appadiyea  neengga'lum  vizhiththirungga'l;  eanenil,  veettejamaan  saayanggaalaththiloa,  naduraaththiriyiloa,  seaval  koovum  nearaththiloa,  kaalaiyiloa,  eppozhuthu  varuvaan  en'ru  neengga'l  a’riyeerga'l.  (maa’rku  13:35)

நீங்கள்  நினையாதவேளையில்  அவன்  வந்து,  உங்களைத்  தூங்குகிறவர்களாகக்  கண்டுபிடியாதபடிக்கு  விழித்திருங்கள்.  (மாற்கு  13:36)

neengga'l  ninaiyaathavea'laiyil  avan  vanthu,  ungga'laith  thoonggugi’ravarga'laagak  ka'ndupidiyaathapadikku  vizhiththirungga'l.  (maa’rku  13:36)

நான்  உங்களுக்குச்  சொல்லுகிறதை  எல்லாருக்கும்  சொல்லுகிறேன்,  விழித்திருங்கள்  என்றார்.  (மாற்கு  13:37)

naan  ungga'lukkuch  sollugi’rathai  ellaarukkum  sollugi'rean,  vizhiththirungga'l  en’raar.  (maa’rku  13:37)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!