உங்களுக்கு முன்பாக
இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே
இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயும்
இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும்
தயவையும் முன்னிட்டு உங்களுக்குப்
புத்திசொல்லுகிறேன். (2கொரிந்தியர் 10:1)
ungga'lukku munbaaga irukkumpoathu thaazhmaiyaayum, thooraththilea irukkumpoathu
ungga'lmeal ka'ndippaayum
irukki’ra
pavulaagiya naan ki’risthuvin saanthaththaiyum
thayavaiyum munnittu ungga'lukkup buththisollugi’rean. (2korinthiyar 10:1)
எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள்
என்று எண்ணுகிற சிலரைக்குறித்து நான் கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிற தைரியத்தோடே,
உங்கள்முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு நீங்கள்
எச்சரிக்கையாயிருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். (2கொரிந்தியர்
10:2)
engga'lai maamsaththinpadi nadakki’ravarga'l en’ru e'n'nugi’ra silaraikku’riththu naan ka'ndippaayirukkavea'ndumen’ru ninaiththirukki’ra thairiyaththoadea, ungga'lmunbaaga irukkumpoathu, naan ka'ndippu'l'lavanaayiraathapadikku neengga'l echcharikkaiyaayirukka ungga'lai vea'ndikko'l'lugi’rean. (2korinthiyar
10:2)
நாங்கள் மாம்சத்தில்
நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல. (2கொரிந்தியர்
10:3)
naangga'l maamsaththil nadakki’ravarga'laayirunthum, maamsaththinpadi poarseygi’ravarga'lalla. (2korinthiyar
10:3)
எங்களுடைய போராயுதங்கள்
மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. (2கொரிந்தியர்
10:4)
engga'ludaiya poaraayuthangga'l maamsaththukkeat’ravaiga'laayiraamal,
ara'nga'lai nirmoolamaakkugi’ratha’rkuth theavabalamu'l'lavaiga'laayirukki’rathu. (2korinthiyar 10:4)
அவைகளால் நாங்கள்
தர்க்கங்களையும், தேவனை அறிகிற
அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற
எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச்
சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
(2கொரிந்தியர் 10:5)
avaiga'laal naangga'l tharkkangga'laiyum, theavanai a’rigi’ra a’rivukku viroathamaay
ezhumbugi’ra ellaa meattimaiyaiyum nirmoolamaakki, entha e'n'naththaiyum ki’risthuvukkuk keezhppadiyach si’raippaduththugi’ravarga'laayirukki’roam. (2korinthiyar 10:5)
உங்கள் கீழ்ப்படிதல்
நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள
தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம். (2கொரிந்தியர்
10:6)
ungga'l keezhppadithal ni’raivea’rumpoathu, ellaak keezhppadiyaamaikkunthakka neethiyu'l'la
tha'ndanaiyaich seluththa aayaththamaayumirukki’roam. (2korinthiyar
10:6)
வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன்
தன்னைக் கிறிஸ்துவுக்குரியவனென்று நம்பினால்,
தான் கிறிஸ்துவுக்குரியவனாயிருக்கிறதுபோல நாங்களும்
கிறிஸ்துவுக்குரியவர்களென்று அவன் தன்னிலேதானே
சிந்திக்கக்கடவன். (2கொரிந்தியர் 10:7)
ve'liththoat’raththinpadi paarkki’reerga'laa? oruvan
thannaik ki’risthuvukkuriyavanen’ru nambinaal, thaan ki’risthuvukkuriyavanaayirukki’rathupoala naangga'lum ki’risthuvukkuriyavarga'len’ru avan thannileathaanea sinthikkakkadavan. (2korinthiyar
10:7)
மேலும், உங்களை
நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக்
கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக்
கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை. (2கொரிந்தியர்
10:8)
mealum, ungga'lai nirmoolamaakkugi’ratha’rkalla, ungga'lai oon’rak kattugi’ratha’rkuk karththar
engga'lukkuk koduththa
athigaaraththaikku’riththu, naan innum sat’rea athigamaay meanmaipaaraattinaalum naan vedkappaduvathillai. (2korinthiyar
10:8)
நான் நிருபங்களாலே
உங்களைப் பயமுறுத்துகிறவனாய்த் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். (2கொரிந்தியர்
10:9)
naan nirubangga'laalea ungga'laip bayamu’ruththugi’ravanaayth thoan’raathapadikku ithaich sollugi’rean. (2korinthiyar
10:9)
அவனுடைய நிருபங்கள்
பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின்
தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே. (2கொரிந்தியர்
10:10)
avanudaiya nirubangga'l baarayoasanaiyum balamumu'l'lavaiga'l; sareeraththin thoat’ramoa balaveenamum, vasanam a’rpamumaayirukki’rathengi’raarga'lea. (2korinthiyar
10:10)
அப்படிச் சொல்லுகிறவன்,
நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற
நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும்
இருப்போம் என்று சிந்திக்கக்கடவன். (2கொரிந்தியர்
10:11)
appadich sollugi’ravan, naangga'l thooraththilirukkumpoathu ezhuthugi’ra nirubangga'laal vasanaththil eppadippattavarga'laayirukki’roamoa, appadippattavarga'laagavea sameebaththilirukkumpoathum kiriyaiyilum
iruppoam en’ru sinthikkakkadavan.
(2korinthiyar 10:11)
ஆகிலும் தங்களைத்
தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு
நாங்கள் எங்களைச் சரியாக்கவும்
ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை
அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை
ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல. (2கொரிந்தியர்
10:12)
aagilum thangga'laith thaangga'lea mechchikko'l'lugi’ra silarukku naangga'l engga'laich sariyaakkavum oppidavum thu'niyamaattoam; thangga'laikko'ndu thangga'lai a'lanthuko'ndu, thangga'lukkea thangga'lai oppittukko'l'lugi’ra avarga'l buththimaanga'lalla. (2korinthiyar
10:12)
நாங்கள் அளவுக்கு
மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து
பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம். (2கொரிந்தியர்
10:13)
naangga'l a'lavukku mignchi meanmaipaaraattaamal, ungga'lidamvaraikkum vanthettaththakkathaaga, theavan engga'lukku a'lanthu
pagirntha
a'lavuppiramaa'naththinpadiyea meanmaipaaraattugi’roam. (2korinthiyar 10:13)
உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள்
அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை; நாங்கள்
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து
உங்களிடம்வரைக்கும் வந்தோமே. (2கொரிந்தியர்
10:14)
ungga'lidaththil vanthettaathavarga'laay naangga'l a'lavukku
mignchippoagi’rathillai; naangga'l ki’risthuvin suviseashaththaip pirasanggiththu ungga'lidamvaraikkum vanthoamea.
(2korinthiyar 10:14)
எங்கள் அளவைக்
கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மைபாராட்டமாட்டோம். (2கொரிந்தியர்
10:15)
engga'l a'lavaik kadanthu
mat’ravarga'ludaiya vealaikkudpattu meanmaipaaraattamaattoam. (2korinthiyar 10:15)
ஆகிலும் உங்கள்
விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய
எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள்
செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு
அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப்
பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி
உங்களால் மிகவும் பெருகி
விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம். (2கொரிந்தியர்
10:16)
aagilum ungga'l visuvaasam viruththiyaagumpoathu, mat’ravarga'ludaiya ellaiga'lukku'l'lea seyyappattavaiga'lai naangga'l seythathaaga meanmaipaaraattaamal, ungga'lukku appu’ramaana idangga'lil suviseashaththaip pirasanggikkaththakkathaaga, engga'l a'lavinpadi ungga'laal migavum perugi viruththiyadaivoamen’ru nambikkaiyaayirukki’roam. (2korinthiyar 10:16)
மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். (2கொரிந்தியர்
10:17)
meanmaipaaraattugi’ravan karththaraikku’riththea meanmaipaaraattakkadavan. (2korinthiyar 10:17)
தன்னைத்தான் புகழுகிறவன்
உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
(2கொரிந்தியர் 10:18)
thannaiththaan pugazhugi’ravan uththamanalla, karththaraal
pugazhappadugi’ravanea uththaman.
(2korinthiyar 10:18)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!