Tuesday, April 05, 2016

Maththeayu 8 | மத்தேயு 8 | Matthew 8


அவர்  மலையிலிருந்து  இறங்கினபோது,  திரளான  ஜனங்கள்  அவருக்குப்  பின்சென்றார்கள்.  (மத்தேயு  8:1)

avar  malaiyilirunthu  i'rangginapoathu,  thira'laana  janangga'l  avarukkup  pinsen'raarga'l.  (maththeayu  8:1)

அப்பொழுது  குஷ்டரோகி  ஒருவன்  வந்து  அவரைப்  பணிந்து:  ஆண்டவரே!  உமக்குச்  சித்தமானால்,  என்னைச்  சுத்தமாக்க  உம்மால்  ஆகும்  என்றான்.  (மத்தேயு  8:2)

appozhuthu  kushdaroagi  oruvan  vanthu  avaraip  pa'ninthu:  aa'ndavarea!  umakkuch  siththamaanaal,  ennaich  suththamaakka  ummaal  aagum  en'raan.  (maththeayu  8:2)

இயேசு  தமது  கையை  நீட்டி  அவனைத்  தொட்டு:  எனக்குச்  சித்தமுண்டு,  சுத்தமாகு  என்றார்.  உடனே  குஷ்டரோகம்  நீங்கி  அவன்  சுத்தமானான்.  (மத்தேயு  8:3)

iyeasu  thamathu  kaiyai  neetti  avanaith  thottu:  enakkuch  siththamu'ndu,  suththamaagu  en'raar.  udanea  kushdaroagam  neenggi  avan  suththamaanaan.  (maththeayu  8:3)

இயேசு  அவனை  நோக்கி:  இதை  நீ  ஒருவருக்கும்  சொல்லாதபடி  எச்சரிக்கையாயிரு;  ஆயினும்,  அவர்களுக்குச்  சாட்சியாக  நீ  போய்  ஆசாரியனுக்கு  உன்னைக்  காண்பித்து,  மோசே  கட்டளையிட்ட  காணிக்கையைச்  செலுத்து  என்றார்.  (மத்தேயு  8:4)

iyeasu  avanai  noakki:  ithai  nee  oruvarukkum  sollaathapadi  echcharikkaiyaayiru;  aayinum,  avarga'lukkuch  saadchiyaaga  nee  poay  aasaariyanukku  unnaik  kaa'nbiththu,  moasea  katta'laiyitta  kaa'nikkaiyaich  seluththu  en'raar.  (maththeayu  8:4)

இயேசு  கப்பர்நகூமில்  பிரவேசித்தபோது,  நூற்றுக்கு  அதிபதி  ஒருவன்  அவரிடத்தில்  வந்து:  (மத்தேயு  8:5)

iyeasu  kapparnahoomil  piraveasiththapoathu,  noot’rukku  athibathi  oruvan  avaridaththil  vanthu:  (maththeayu  8:5)

ஆண்டவரே!  என்  வேலைக்காரன்  வீட்டிலே  திமிர்வாதமாய்க்  கிடந்து  கொடிய  வேதனைப்படுகிறான்  என்று  அவரை  வேண்டிக்கொண்டான்.  (மத்தேயு  8:6)

aa'ndavarea!  en  vealaikkaaran  veettilea  thimirvaathamaayk  kidanthu  kodiya  veathanaippadugi'raan  en'ru  avarai  vea'ndikko'ndaan.  (maththeayu  8:6)

அதற்கு  இயேசு:  நான்  வந்து  அவனைச்  சொஸ்தமாக்குவேன்  என்றார்.  (மத்தேயு  8:7)

atha’rku  iyeasu:  naan  vanthu  avanaich  sosthamaakkuvean  en'raar.  (maththeayu  8:7)

நூற்றுக்கு  அதிபதி  பிரதியுத்தரமாக:  ஆண்டவரே!  நீர்  என்  வீட்டுக்குள்  பிரவேசிக்க  நான்  பாத்திரன்  அல்ல;  ஒரு  வார்த்தைமாத்திரம்  சொல்லும்,  அப்பொழுது  என்  வேலைக்காரன்  சொஸ்தமாவான்.  (மத்தேயு  8:8)

noot’rukku  athibathi  pirathiyuththaramaaga:  aa'ndavarea!  neer  en  veettukku'l  piraveasikka  naan  paaththiran  alla;  oru  vaarththaimaaththiram  sollum,  appozhuthu  en  vealaikkaaran  sosthamaavaan.  (maththeayu  8:8)

நான்  அதிகாரத்துக்குக்  கீழ்ப்பட்டவனாயிருந்தும்,  எனக்குக்  கீழ்ப்பட்டிருக்கிற  சேவகருமுண்டு;  நான்  ஒருவனைப்  போவென்றால்  போகிறான்,  மற்றொருவனை  வாவென்றால்  வருகிறான்,  என்  வேலைக்காரனை,  இதைச்  செய்யென்றால்  செய்கிறான்  என்றான்.  (மத்தேயு  8:9)

naan  athigaaraththukkuk  keezhppattavanaayirunthum,  enakkuk  keezhppattirukki'ra  seavagarumu'ndu;  naan  oruvanaip  poaven'raal  poagi'raan,  mat’roruvanai  vaaven'raal  varugi'raan,  en  vealaikkaaranai,  ithaich  seyyen'raal  seygi'raan  en'raan.  (maththeayu  8:9)

இயேசு  இதைக்  கேட்டு  ஆச்சரியப்பட்டு,  தமக்குப்  பின்செல்லுகிறவர்களை  நோக்கி:  இஸ்ரவேலருக்குள்ளும்  நான்  இப்படிப்பட்ட  விசுவாசத்தைக்  காணவில்லை  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (மத்தேயு  8:10)

iyeasu  ithaik  keattu  aachchariyappattu,  thamakkup  pinsellugi'ravarga'lai  noakki:  isravealarukku'l'lum  naan  ippadippatta  visuvaasaththaik  kaa'navillai  en'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu  8:10)

அநேகர்  கிழக்கிலும்  மேற்கிலுமிருந்து  வந்து,  பரலோகராஜ்யத்தில்  ஆபிரகாம்  ஈசாக்கு  யாக்கோபு  என்பவர்களோடே  பந்தியிருப்பார்கள்.  (மத்தேயு  8:11)

aneagar  kizhakkilum  mea’rkilumirunthu  vanthu,  paraloagaraajyaththil  aabirahaam  eesaakku  yaakkoabu  enbavarga'loadea  panthiyiruppaarga'l.  (maththeayu  8:11)

ராஜ்யத்தின்  புத்திரரோ  புறம்பான  இருளிலே  தள்ளப்படுவார்கள்;  அங்கே  அழுகையும்  பற்கடிப்பும்  உண்டாயிருக்குமென்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (மத்தேயு  8:12)

raajyaththin  puththiraroa  pu'rambaana  iru'lilea  tha'l'lappaduvaarga'l;  anggea  azhugaiyum  pa’rkadippum  u'ndaayirukkumen'ru  ungga'lukkuch  sollugi'rean  en'raar.  (maththeayu  8:12)

பின்பு  இயேசு  நூற்றுக்கு  அதிபதியை  நோக்கி:  நீ  போகலாம்,  நீ  விசுவாசித்தபடியே  உனக்கு  ஆகக்கடவது  என்றார்.  அந்த  நாழிகையிலே  அவன்  வேலைக்காரன்  சொஸ்தமானான்.  (மத்தேயு  8:13)

pinbu  iyeasu  noot'rukku  athibathiyai  noakki:  nee  poagalaam,  nee  visuvaasiththapadiyea  unakku  aagakkadavathu  en'raar.  antha  naazhigaiyilea  avan  vealaikkaaran  sosthamaanaan.  (maththeayu  8:13)

இயேசு  பேதுருவின்  வீட்டிலே  வந்து,  அவன்  மாமி  ஜுரமாய்க்  கிடக்கிறதைக்  கண்டார்.  (மத்தேயு  8:14)

iyeasu  peathuruvin  veettilea  vanthu,  avan  maami  juramaayk  kidakki'rathaik  ka'ndaar.  (maththeayu  8:14)

அவர்  அவள்  கையைத்  தொட்டவுடனே  ஜுரம்  அவளைவிட்டு  நீங்கிற்று;  அவள்  எழுந்திருந்து,  அவர்களுக்குப்  பணிவிடை  செய்தாள்.  (மத்தேயு  8:15)

avar  ava'l  kaiyaith  thottavudanea  juram  ava'laivittu  neenggit'ru;  ava'l  ezhunthirunthu,  avarga'lukkup  pa'nividai  seythaa'l.  (maththeayu  8:15)

அஸ்தமனமானபோது,  பிசாசு  பிடித்திருந்த  அநேகரை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  அவர்  அந்த  ஆவிகளைத்  தமது  வார்த்தையினாலே  துரத்தி,  பிணியாளிகளெல்லாரையும்  சொஸ்தமாக்கினார்.  (மத்தேயு  8:16)

asthamanamaanapoathu,  pisaasu  pidiththiruntha  aneagarai  avaridaththil  ko'nduvanthaarga'l;  avar  antha  aaviga'laith  thamathu  vaarththaiyinaalea  thuraththi,  pi'niyaa'liga'lellaaraiyum  sosthamaakkinaar.  (maththeayu  8:16)

அவர்  தாமே  நம்முடைய  பெலவீனங்களை  ஏற்றுக்கொண்டு,  நம்முடைய  நோய்களைச்  சுமந்தார்  என்று,  ஏசாயா  தீர்க்கதரிசியினால்  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இப்படி  நடந்தது.  (மத்தேயு  8:17)

avar  thaamea  nammudaiya  belaveenangga'lai  eat'rukko'ndu,  nammudaiya  noayga'laich  sumanthaar  en'ru,  easaayaa  theerkkatharisiyinaal  uraikkappattathu  ni'raivea'rumpadi  ippadi  nadanthathu.  (maththeayu  8:17)

பின்பு,  திரளான  ஜனங்கள்  தம்மைச்  சூழ்ந்திருக்கிறதை  இயேசு  கண்டு,  அக்கரைக்குப்  போகக்  கட்டளையிட்டார்.  (மத்தேயு  8:18)

pinbu,  thira'laana  janangga'l  thammaich  soozhnthirukki'rathai  iyeasu  ka'ndu,  akkaraikkup  poagak  katta'laiyittaar.  (maththeayu  8:18)

அப்பொழுது,  வேதபாரகன்  ஒருவன்  வந்து:  போதகரே!  நீர்  எங்கே  போனாலும்  உம்மைப்  பின்பற்றி  வருவேன்  என்றான்.  (மத்தேயு  8:19)

appozhuthu,  veathapaaragan  oruvan  vanthu:  poathagarea!  neer  enggea  poanaalum  ummaip  pinpat’ri  varuvean  en'raan.  (maththeayu  8:19)

அதற்கு  இயேசு:  நரிகளுக்குக்  குழிகளும்  ஆகாயத்துப்  பறவைகளுக்குக்  கூடுகளும்  உண்டு;  மனுஷகுமாரனுக்கோ  தலைசாய்க்க  இடமில்லை  என்றார்.  (மத்தேயு  8:20)

atha’rku  iyeasu:  nariga'lukkuk  kuzhiga'lum  aagaayaththup  pa'ravaiga'lukkuk  kooduga'lum  u'ndu;  manushakumaaranukkoa  thalaisaaykka  idamillai  en'raar.  (maththeayu  8:20)

அவருடைய  சீஷர்களில்  வேறொருவன்  அவரை  நோக்கி:  ஆண்டவரே!  முன்பு  நான்  போய்,  என்  தகப்பனை  அடக்கம்பண்ண  எனக்கு  உத்தரவு  கொடுக்கவேண்டும்  என்றான்.  (மத்தேயு  8:21)

avarudaiya  seesharga'lil  vea'roruvan  avarai  noakki:  aa'ndavarea!  munbu  naan  poay,  en  thagappanai  adakkampa'n'na  enakku  uththaravu  kodukkavea'ndum  en'raan.  (maththeayu  8:21)

அதற்கு  இயேசு:  மரித்தோர்  தங்கள்  மரித்தோரை  அடக்கம்பண்ணட்டும்,  நீ  என்னைப்  பின்பற்றி  வா  என்றார்.  (மத்தேயு  8:22)

atha’rku  iyeasu:  mariththoar  thangga'l  mariththoarai  adakkampa'n'nattum,  nee  ennaip  pinpat'ri  vaa  en'raar.  (maththeayu  8:22)

அவர்  படவில்  ஏறினபோது  அவருடைய  சீஷர்கள்  அவருக்குப்  பின்சென்று  ஏறினார்கள்.  (மத்தேயு  8:23)

avar  padavil  ea'rinapoathu  avarudaiya  seesharga'l  avarukkup  pinsen'ru  ea'rinaarga'l.  (maththeayu  8:23)

அப்பொழுது  படவு  அலைகளினால்  மூடப்படத்தக்கதாய்க்  கடலில்  பெருங்காற்று  உண்டாயிற்று.  அவரோ  நித்திரையாயிருந்தார்.  (மத்தேயு  8:24)

appozhuthu  padavu  alaiga'linaal  moodappadaththakkathaayk  kadalil  perungkaat'ru  u'ndaayit'ru.  avaroa  niththiraiyaayirunthaar.  (maththeayu  8:24)

அப்பொழுது,  அவருடைய  சீஷர்கள்  வந்து,  அவரை  எழுப்பி:  ஆண்டவரே!  எங்களை  இரட்சியும்,  மடிந்துபோகிறோம்  என்றார்கள்.  (மத்தேயு  8:25)

appozhuthu,  avarudaiya  seesharga'l  vanthu,  avarai  ezhuppi:  aa'ndavarea!  engga'lai  iradchiyum,  madinthupoagi'roam  en'raarga'l.  (maththeayu  8:25)

அதற்கு  அவர்:  அற்பவிசுவாசிகளே!  ஏன்  பயப்படுகிறீர்கள்  என்று  சொல்லி;  எழுந்து,  காற்றையும்  கடலையும்  அதட்டினார்.  உடனே,  மிகுந்த  அமைதல்  உண்டாயிற்று.  (மத்தேயு  8:26)

atha’rku  avar:  a’rpavisuvaasiga'lea!  ean  bayappadugi'reerga'l  en'ru  solli;  ezhunthu,  kaat’raiyum  kadalaiyum  athattinaar.  udanea,  miguntha  amaithal  u'ndaayit'ru.  (maththeayu  8:26)

அந்த  மனுஷர்கள்  ஆச்சரியப்பட்டு:  இவர்  எப்படிப்பட்டவரோ,  காற்றும்  கடலும்  இவருக்குக்  கீழ்ப்படிகிறதே  என்றார்கள்.  (மத்தேயு  8:27)

antha  manusharga'l  aachchariyappattu:  ivar  eppadippattavaroa,  kaat'rum  kadalum  ivarukkuk  keezhppadigi'rathea  en'raarga'l.  (maththeayu  8:27)

அவர்  அக்கரையிலே  கெர்கெசேனர்  நாட்டில்  வந்தபோது,  பிசாசு  பிடித்திருந்த  இரண்டுபேர்  பிரேதக்கல்லறைகளிலிருந்து  புறப்பட்டு,  அவருக்கு  எதிராக  வந்தார்கள்;  அவர்கள்  மிகவும்  கொடியராயிருந்தபடியால்,  அந்த  வழியாக  ஒருவனும்  நடக்கக்கூடாதிருந்தது.  (மத்தேயு  8:28)

avar  akkaraiyilea  kerkeseanar  naattil  vanthapoathu,  pisaasu  pidiththiruntha  ira'ndupear  pireathakkalla'raiga'lilirunthu  pu'rappattu,  avarukku  ethiraaga  vanthaarga'l;  avarga'l  migavum  kodiyaraayirunthapadiyaal,  antha  vazhiyaaga  oruvanum  nadakkakkoodaathirunthathu.  (maththeayu  8:28)

அவர்கள்  அவரை  நோக்கி:  இயேசுவே,  தேவனுடைய  குமாரனே,  எங்களுக்கும்  உமக்கும்  என்ன?  காலம்  வருமுன்னே  எங்களை  வேதனைப்படுத்த  இங்கே  வந்தீரோ  என்று  கூப்பிட்டார்கள்.  (மத்தேயு  8:29)

avarga'l  avarai  noakki:  iyeasuvea,  theavanudaiya  kumaaranea,  engga'lukkum  umakkum  enna?  kaalam  varumunnea  engga'lai  veathanaippaduththa  inggea  vantheeroa  en'ru  kooppittaarga'l.  (maththeayu  8:29)

அவர்களுக்குக்  கொஞ்சதூரத்தில்  அநேகம்  பன்றிகள்  கூட்டமாக  மேய்ந்துகொண்டிருந்தன.  (மத்தேயு  8:30)

avarga'lukkuk  kognchathooraththil  aneagam  pan'riga'l  koottamaaga  meaynthuko'ndirunthana.  (maththeayu  8:30)

அப்பொழுது,  பிசாசுகள்:  நீர்  எங்களைத்  துரத்துவீரானால்,  நாங்கள்  அந்தப்  பன்றிக்கூட்டத்தில்  போகும்படி  உத்தரவு  கொடும்  என்று  அவரை  வேண்டிக்கொண்டன.  (மத்தேயு  8:31)

appozhuthu,  pisaasuga'l:  neer  engga'laith  thuraththuveeraanaal,  naangga'l  anthap  pan'rikkoottaththil  poagumpadi  uththaravu  kodum  en'ru  avarai  vea'ndikko'ndana.  (maththeayu  8:31)

அதற்கு  அவர்:  போங்கள்  என்றார்.  அவைகள்  புறப்பட்டு,  பன்றிக்கூட்டத்தில்  போயின;  அப்பொழுது,  பன்றிக்கூட்டமெல்லாம்  உயர்ந்த  மேட்டிலிருந்து  கடலிலே  பாய்ந்து,  ஜலத்தில்  மாண்டுபோயின.  (மத்தேயு  8:32)

atha’rku  avar:  poangga'l  en'raar.  avaiga'l  pu'rappattu,  pan'rikkoottaththil  poayina;  appozhuthu,  pan'rikkoottamellaam  uyarntha  meattilirunthu  kadalilea  paaynthu,  jalaththil  maa'ndupoayina.  (maththeayu  8:32)

அவைகளை  மேய்த்தவர்கள்  ஓடி,  பட்டணத்தில்  சென்று,  இந்தச்  சங்கதிகள்  எல்லாவற்றையும்,  பிசாசு  பிடித்திருந்தவர்களுக்குச்  சம்பவித்தவைகளையும்  அறிவித்தார்கள்.  (மத்தேயு  8:33)

avaiga'lai  meayththavarga'l  oadi,  patta'naththil  sen'ru,  inthach  sanggathiga'l  ellaavat'raiyum,  pisaasu  pidiththirunthavarga'lukkuch  sambaviththavaiga'laiyum  a'riviththaarga'l.  (maththeayu  8:33)

அப்பொழுது,  அந்தப்  பட்டணத்தார்  யாவரும்  இயேசுவுக்கு  எதிர்கொண்டுவந்து,  அவரைக்  கண்டு,  தங்கள்  எல்லைகளைவிட்டுப்  போகும்படி  அவரை  வேண்டிக்கொண்டார்கள்.  (மத்தேயு  8:34)

appozhuthu,  anthap  patta'naththaar  yaavarum  iyeasuvukku  ethirko'nduvanthu,  avaraik  ka'ndu,  thangga'l  ellaiga'laivittup  poagumpadi  avarai  vea'ndikko'ndaarga'l.  (maththeayu  8:34)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!