இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி
முடித்தபின்பு, அவர் தம்முடைய
சீஷரை நோக்கி: (மத்தேயு
26:1)
iyeasu intha vasanangga'laiyellaam solli
mudiththapinbu, avar
thammudaiya seesharai
noakki: (maththeayu 26:1)
இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை
வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது,
மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
(மத்தேயு 26:2)
ira'ndunaa'laikkuppinbu paskaapa'ndigai varumen'ru a'riveerga'l; appozhuthu,
manushakumaaran siluvaiyil a'raiyappaduvatha’rku oppukkodukkappaduvaar en'raar. (maththeayu
26:2)
அப்பொழுது,
பிரதான ஆசாரியரும் வேதபாரகரும்
ஜனத்தின் மூப்பரும், காய்பா
என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய
அரமனையிலே கூடிவந்து, (மத்தேயு
26:3)
appozhuthu, pirathaana
aasaariyarum veathapaaragarum janaththin
moopparum, kaaypaa ennappatta pirathaana
aasaariyanudaiya aramanaiyilea
koodivanthu, (maththeayu 26:3)
இயேசுவைத்
தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள். (மத்தேயு
26:4)
iyeasuvaith thanthiramaayp pidiththuk
kolaiseyyumpadi aaloasanaipa'n'ninaarga'l. (maththeayu 26:4)
ஆகிலும்
ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே
அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.
(மத்தேயு 26:5)
aagilum janangga'lukku'l'lea
kalagamu'ndaagaathapadikkup pa'ndigaiyilea appadich seyyalaagaathu en'raarga'l. (maththeayu
26:5)
இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன்
வீட்டில் இருக்கையில், (மத்தேயு
26:6)
iyeasu beththaaniyaavil
kushdaroagiyaayiruntha seemoan veettil
irukkaiyil, (maththeayu 26:6)
ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள
வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத்
தைலத்தை அவர் சிரசின்மேல்
ஊற்றினாள். (மத்தேயு 26:7)
oru sthiree
vilaiyea'rappet’ra parima'lathailamu'l'la ve'l'laikkalpara'niyaik ko'nduvanthu,
avar
poajanapanthiyilirukkumpoathu,
anthath thailaththai avar sirasinmeal oot’rinaa'l. (maththeayu
26:7)
அவருடைய
சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு?
(மத்தேயு 26:8)
avarudaiya seesharga'l
athaik ka'ndu visanamadainthu: intha
vee'nselavu ennaththi’rku? (maththeayu
26:8)
இந்தத்
தைலத்தை உயர்ந்த விலைக்கு
விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே
என்றார்கள். (மத்தேயு 26:9)
inthath thailaththai
uyarntha vilaikku vit’ru, thariththirarukkuk kodukkalaamea
en'raarga'l. (maththeayu
26:9)
இயேசு அதை அறிந்து,
அவர்களை நோக்கி: நீங்கள்
இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில்
நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத்தேயு
26:10)
iyeasu athai a'rinthu, avarga'lai noakki:
neengga'l
intha sthireeyai ean
thontharavupaduththugi'reerga'l?
ennidaththil na’rkiriyaiyaich seythirukki'raa'l. (maththeayu 26:10)
தரித்திரர்
எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில்
இரேன். (மத்தேயு 26:11)
thariththirar eppoathum
ungga'lidaththil irukki'raarga'l;
naanoa eppoathum ungga'lidaththil irean.
(maththeayu 26:11)
இவள் இந்தத் தைலத்தை
என் சரீரத்தின்மேல் ஊற்றினது
என்னை அடக்கம் பண்ணுவதற்கு
எத்தனமான செய்கையாயிருக்கிறது. (மத்தேயு
26:12)
iva'l inthath
thailaththai en sareeraththinmeal oot'rinathu ennai
adakkam pa'n'nuvatha’rku
eththanamaana seygaiyaayirukki'rathu. (maththeayu 26:12)
இந்தச்
சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே
பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும்
என்று மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு
26:13)
inthach suviseasham ulagaththil enggenggea pirasanggikkappadumoa angganggea
iva'lai ninaippatha’rkaaga iva'l seythathum sollappadum en'ru meyyaagavea ungga'lukkuch sollugi'rean en'raar. (maththeayu 26:13)
அப்பொழுது,
பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன்
பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: (மத்தேயு 26:14)
appozhuthu, panniruvaril
oruvanaagiya yoothaaskaariyoaththu enbavan pirathaana
aasaariyaridaththi’rkup poay: (maththeayu
26:14)
நான் அவரை உங்களுக்குக்
காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு
என்ன கொடுக்கிறீர்கள் என்றான்.
அவர்கள் அவனுக்கு முப்பது
வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். (மத்தேயு
26:15)
naan avarai
ungga'lukkuk kaattikkodukki'rean, neengga'l
enakku enna kodukki'reerga'l en'raan. avarga'l
avanukku muppathu ve'l'likkaasaik kodukka
udanpattaarga'l. (maththeayu
26:15)
அதுமுதல்
அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். (மத்தேயு
26:16)
athumuthal avan
avaraik kaattikkoduppatha’rkuch samayam
paarththukko'ndirunthaan. (maththeayu 26:16)
புளிப்பில்லாத
அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள்
இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப்
புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச்
சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
(மத்தேயு 26:17)
pu'lippillaatha appappa'ndigaiyin muthalnaa'lilea, seesharga'l iyeasuvinidaththil
vanthu: paskaavaip pusippatha’rku naangga'l enggea umakku aayaththampa'n'nach siththamaayirukki'reer en'ru keattaarga'l. (maththeayu
26:17)
அதற்கு
அவர்: நீங்கள் நகரத்திலே
இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை
ஆசரிப்பேன் என்று போதகர்
சொல்லுகிறார் என்று அவனுக்குச்
சொல்லுங்கள் என்றார். (மத்தேயு
26:18)
atha’rku avar: neengga'l nagaraththilea innaanidaththi’rkup poay:
en vea'lai sameebamaayirukki'rathu, un veettilea en seesharoadeakoodap paskaavai
aasarippean en'ru poathagar sollugi'raar en'ru avanukkuch sollungga'l en'raar. (maththeayu
26:18)
இயேசு கற்பித்தபடி சீஷர்கள்
போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். (மத்தேயு
26:19)
iyeasu ka’rpiththapadi seesharga'l poay,
paskaavai aayaththampa'n'ninaarga'l. (maththeayu 26:19)
சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். (மத்தேயு
26:20)
saayanggaalamaanapoathu, panniruvaroadungkooda avar
panthiyirunthaar. (maththeayu 26:20)
அவர்கள்
போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன்
என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு
26:21)
avarga'l poajanampa'n'nugaiyil,
avar: ungga'liloruvan ennaik
kaattikkoduppaan en'ru meyyaagavea ungga'lukkuch sollugi'rean en'raar. (maththeayu
26:21)
அப்பொழுது,
அவர்கள் மிகவும் துக்கமடைந்து,
அவரை நோக்கி: ஆண்டவரே,
நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். (மத்தேயு
26:22)
appozhuthu, avarga'l migavum thukkamadainthu, avarai
noakki: aa'ndavarea, naanoa,
naanoa? en'ru ovvoruvaraayk keadkaththodangginaarga'l. (maththeayu 26:22)
அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத்
தாலத்தில் கையிடுகிறவனே என்னைக்
காட்டிக்கொடுப்பான். (மத்தேயு 26:23)
avar pirathiyuththaramaaga: ennoadeakoodath thaalaththil
kaiyidugi'ravanea ennaik
kaattikkoduppaan. (maththeayu
26:23)
மனுஷகுமாரன்
தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்;
ஆகிலும், எந்த மனுஷனால்
மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன்
பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.
(மத்தேயு 26:24)
manushakumaaran thammaikku'riththu ezhuthiyirukki'rapadiyea poagi'raar; aagilum, entha
manushanaal manushakumaaran kaattikkodukkappadugi'raaroa,
antha manushanukku aiyoa;
antha manushan pi'ravaathirunthaanaanaal avanukku
nalamaayirukkum en'raar. (maththeayu 26:24)
அவரைக்
காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்;
அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.
(மத்தேயு 26:25)
avaraik kaattikkoduththa yoothaasum avarai
noakki: rabee, naanoa? en'raan; atha’rku avar:
nee sonnapadithaan en'raar. (maththeayu
26:25)
அவர்கள்
போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை
எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து:
நீங்கள் வாங்கிப் புசியுங்கள்,
இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
(மத்தேயு 26:26)
avarga'l poajanampa'n'nugaiyil, iyeasu
appaththai eduththu, aaseervathiththu, athaip
pittu,
seesharga'lukkuk koduththu:
neengga'l
vaanggip
pusiyungga'l, ithu
ennudaiya sareeramaayirukki'rathu en'raar. (maththeayu
26:26)
பின்பு,
பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக்
கொடுத்து: நீங்கள் எல்லாரும்
இதிலே பானம்பண்ணுங்கள்; (மத்தேயு
26:27)
pinbu,
paaththiraththaiyum
eduththu,
sthoaththirampa'n'ni, avarga'lukkuk
koduththu: neengga'l
ellaarum ithilea baanampa'n'nungga'l; (maththeayu 26:27)
இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச்
சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய
இரத்தமாயிருக்கிறது. (மத்தேயு 26:28)
ithu paavamannippu'ndaagumpadi aneagarukkaagach sinthappadugi'ra puthu
udanpadikkaikkuriya
ennudaiya iraththamaayirukki'rathu. (maththeayu 26:28)
இதுமுதல்
இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய்
உங்களோடேகூட என் பிதாவின்
ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும்
நாள்வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு
26:29)
ithumuthal inthath
thiraadchappazharasaththai navamaanathaay ungga'loadeakooda en
pithaavin raajyaththilea naan baanampa'n'num
naa'lvaraikkum ithaip baanam pa'n'nuvathillaiyen'ru ungga'lukkuch sollugi'rean en'raar. (maththeayu
26:29)
அவர்கள்
ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப்
புறப்பட்டுப்போனார்கள். (மத்தேயு 26:30)
avarga'l
sthoaththirappaattaip paadinapinbu, olivamalaikkup pu'rappattuppoanaarga'l. (maththeayu
26:30)
அப்பொழுது,
இயேசு அவர்களை நோக்கி:
மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின்
ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள்
எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். (மத்தேயு
26:31)
appozhuthu, iyeasu avarga'lai noakki:
meayppanai vettuvean,
manthaiyin aaduga'l sitha'radikkappadum en'ru ezhuthiyirukki'rapadi, intha
iraaththiriyilea neengga'l
ellaarum ennimiththam ida'raladaiveerga'l. (maththeayu 26:31)
ஆகிலும்
நான் உயிர்த்தெழுந்த பின்பு,
உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன்
என்றார். (மத்தேயு 26:32)
aagilum naan uyirththezhuntha pinbu, ungga'lukku munnea
kalileayaavukkup poavean en'raar. (maththeayu
26:32)
பேதுரு
அவருக்குப் பிரதியுத்தரமாக: உமதுநிமித்தம்
எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன்
என்றான். (மத்தேயு 26:33)
peathuru avarukkup
pirathiyuththaramaaga: umathunimiththam ellaarum
ida'raladainthaalum, naan
orukkaalum ida'raladaiyean en'raan. (maththeayu 26:33)
இயேசு அவனை நோக்கி:
இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே,
நீ என்னை மூன்றுதரம்
மறுதலிப்பாய் என்று, மெய்யாகவே
உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
(மத்தேயு 26:34)
iyeasu avanai noakki:
intha iraaththiriyilea seaval koovugi'ratha’rku munnea, nee
ennai moon'rutharam ma'ruthalippaay
en'ru,
meyyaagavea unakkuch sollugi'rean en'raar. (maththeayu 26:34)
அதற்குப்
பேதுரு: நான் உம்மோடே
மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்;
சீஷர்கள் எல்லாரும் அப்படியே
சொன்னார்கள். (மத்தேயு 26:35)
atha’rkup
peathuru: naan ummoadea
marikkavea'ndiyathaayirunthaalum
ummai ma'ruthalikkamaattean en'raan; seesharga'l ellaarum
appadiyea sonnaarga'l. (maththeayu
26:35)
அப்பொழுது,
இயேசு அவர்களோடே கெத்செமனே
என்னப்பட்ட இடத்திற்கு வந்து,
சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள்
இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; (மத்தேயு
26:36)
appozhuthu, iyeasu avarga'loadea kethsemanea ennappatta idaththi’rku vanthu,
seesharga'lai noakki:
naan anggea poay
jebampa'n'numa'lavum neengga'l inggea udkaarnthirungga'l en'ru solli; (maththeayu
26:36)
பேதுருவையும்
செபெதேயுவின் குமாரர் இருவரையும்
கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
(மத்தேயு 26:37)
peathuruvaiyum sebetheayuvin kumaarar
iruvaraiyum koottikko'ndupoay,
thukkamadaiyavum viyaagulappadavum
thodangginaar. (maththeayu
26:37)
அப்பொழுது,
அவர்: என் ஆத்துமா
மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள்
இங்கே தங்கி, என்னோடேகூட
விழித்திருங்கள் என்று சொல்லி,
(மத்தேயு 26:38)
appozhuthu, avar:
en aaththumaa mara'naththukkeathuvaana thukkangko'ndirukki'rathu; neengga'l inggea thanggi, ennoadeakooda
vizhiththirungga'l en'ru solli, (maththeayu
26:38)
சற்று அப்புறம்போய், முகங்குப்புற
விழுந்து: என் பிதாவே,
இந்தப் பாத்திரம் என்னைவிட்டு
நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்;
ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய
சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு
26:39)
sat'ru appu'rampoay, mugangkuppu'ra vizhunthu:
en pithaavea, inthap
paaththiram ennaivittu neenggakkoodumaanaal
neenggumpadi seyyum; aagilum en siththaththinpadiyalla, ummudaiya
siththaththinpadiyea aagakkadavathu en'ru jebampa'n'ninaar. (maththeayu
26:39)
பின்பு,
அவர் சீஷர்களிடத்தில் வந்து,
அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு,
பேதுருவை நோக்கி: நீங்கள்
ஒரு மணி நேரமாவது
என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? (மத்தேயு
26:40)
pinbu, avar seesharga'lidaththil vanthu, avarga'l niththiraipa'n'nugi'rathaik ka'ndu,
peathuruvai noakki: neengga'l oru
ma'ni nearamaavathu ennoadeakooda
vizhiththirukkakkoodaathaa? (maththeayu 26:40)
நீங்கள்
சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ
பலவீனமுள்ளது என்றார். (மத்தேயு
26:41)
neengga'l soathanaikkudpadaathapadikku
vizhiththirunthu jebampa'n'nungga'l; aavi u’rchaagamu'l'lathuthaan, maamsamoa balaveenamu'l'lathu en'raar. (maththeayu
26:41)
அவர் மறுபடியும் இரண்டாந்தரம்
போய்: என் பிதாவே,
இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய
சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு
26:42)
avar ma'rupadiyum ira'ndaantharam poay:
en pithaavea, inthap
paaththiraththil naan baanampa'n'ninaalozhiya ithu
ennaivittu neenggakkoodaathaagil,
ummudaiya siththaththinpadi aagakkadavathu en'ru jebampa'n'ninaar.
(maththeayu 26:42)
அவர் திரும்ப வந்தபோது,
அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்;
அவர்களுடைய கண்கள் மிகுந்த
நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. (மத்தேயு
26:43)
avar thirumba vanthapoathu,
avarga'l
ma'rupadiyum niththiraipa'n'nugi'rathaik ka'ndaar;
avarga'ludaiya ka'nga'l miguntha niththiraimayakkam adainthirunthathu. (maththeayu
26:43)
அவர் மறுபடியும் அவர்களை
விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி
ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26:44)
avar ma'rupadiyum avarga'lai vittuppoay, moon'raantharamum antha
vaarththaiga'laiyea solli jebampa'n'ninaar. (maththeayu
26:44)
பின்பு
அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து:
இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய
கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்தது. (மத்தேயு
26:45)
pinbu avar thammudaiya
seesharga'lidaththil vanthu:
ini niththiraipa'n'ni i'laippaa'rungga'l;
ithoa, manushakumaaran paaviga'ludaiya kaiga'lil oppukkodukkappadugi'ra vea'lai
vanthathu. (maththeayu 26:45)
என்னைக்
காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம்
என்றார். (மத்தேயு 26:46)
ennaik kaattikkodukki'ravan,
ithoa, vanthuvittaan,
ezhunthirungga'l, poavoam
en'raar.
(maththeayu 26:46)
அவர் இப்படிப் பேசுகையில்,
பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்
வந்தான்; அவனோடேகூடப் பிரதான
ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும்
அனுப்பின திரளான ஜனங்கள்
பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
(மத்தேயு 26:47)
avar ippadip
peasugaiyil, panniruvaril
oruvanaagiya yoothaas
vanthaan; avanoadeakoodap pirathaana
aasaariyarum janaththin
moopparum anuppina thira'laana
janangga'l pattayangga'laiyum thadiga'laiyum
pidiththukko'ndu vanthaarga'l. (maththeayu 26:47)
அவரைக்
காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான்,
அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம்
சொல்லியிருந்தான். (மத்தேயு 26:48)
avaraik kaattikkodukki'ravan:
naan evanai muththagnseyveanoa avanthaan,
avanaip pidiththukko'l'lungga'l en'ru avarga'lukku
adaiyaa'lam solliyirunthaan.
(maththeayu 26:48)
உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து:
ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். (மத்தேயு
26:49)
udanea, avan
iyeasuvinidaththil vanthu:
rabee,
vaazhga
en'ru
solli,
avarai muththagnseythaan. (maththeayu 26:49)
இயேசு அவனை நோக்கி:
சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார்.
அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து,
இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப்
பிடித்தார்கள். (மத்தேயு 26:50)
iyeasu avanai noakki:
sineagithanea, ennaththi’rkaaga vanthirukki'raay en'raar. appozhuthu, avarga'l kittavanthu, iyeasuvinmeal kaipoattu, avaraip
pidiththaarga'l. (maththeayu
26:50)
அப்பொழுது
இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கை நீட்டித் தன் பட்டயத்தை உருவி,
பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக்
காதற வெட்டினான். (மத்தேயு
26:51)
appozhuthu iyeasuvoadirunthavarga'lil
oruvan kai neettith than
pattayaththai uruvi,
pirathaana aasaariyanudaiya
vealaikkaaranaik kaatha'ra vettinaan. (maththeayu 26:51)
அப்பொழுது,
இயேசு அவனை நோக்கி:
உன் பட்டயத்தைத் திரும்ப
அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற
யாவரும் பட்டயத்தால் மடிந்து
போவார்கள். (மத்தேயு 26:52)
appozhuthu, iyeasu avanai
noakki: un pattayaththaith thirumba athin
u'raiyilea poadu;
pattayaththai edukki'ra yaavarum
pattayaththaal madinthu
poavaarga'l. (maththeayu
26:52)
நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு
அதிகமான தூதரை என்னிடத்தில்
அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? (மத்தேயு
26:53)
naan ippozhuthu
en pithaavai vea'ndikko'ndaal, avar
pannira'ndu leagiyoanukku athigamaana
thootharai ennidaththil anuppamaattaaren'ru ninaikki'raayaa? (maththeayu 26:53)
அப்படிச்
செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற
வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்
என்றார். (மத்தேயு 26:54)
appadich seyveanaanaal,
ivvithamaaych sambavikkavea'ndum
engi'ra
veathavaakkiyangga'l eppadi
ni'raivea'rum en'raar. (maththeayu
26:54)
அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி:
கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள்
பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப்
பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும்
உங்கள் நடுவிலே உட்கார்ந்து
தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது,
நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. (மத்தேயு
26:55)
antha vea'laiyilea
iyeasu
janangga'lai noakki:
ka'l'lanaip pidikkap pu'rappadugi'rathupoala,
neengga'l
pattayangga'laiyum thadiga'laiyum eduththukko'ndu ennaip
pidikkavantheerga'l; naan thinanthoa'rum ungga'l
naduvilea udkaarnthu theavaalayaththil ubatheasampa'n'nikko'ndirunthean; appozhuthu,
neengga'l
ennaip pidikkavillaiyea. (maththeayu
26:55)
ஆகிலும்
தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள்
நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது
என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு
ஓடிப்போனார்கள். (மத்தேயு 26:56)
aagilum
theerkkatharisiga'l ezhuthiyirukki'ra vasanangga'l ni'raivea'rumpadi ivaiga'lellaam sambavikki'rathu en'raar. appozhuthu,
seesharga'lellaarum avaraivittu oadippoanaarga'l. (maththeayu
26:56)
இயேசுவைப்
பிடித்தவர்கள் அவரைப் பிரதான
ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும்
கூடிவந்திருந்தார்கள். (மத்தேயு 26:57)
iyeasuvaip pidiththavarga'l
avaraip pirathaana aasaariyanaagiya kaaypaavinidaththi’rkuk
ko'ndupoanaarga'l; anggea veathapaaragarum moopparum
koodivanthirunthaarga'l. (maththeayu
26:57)
பேதுரு,
தூரத்திலே அவருக்குப் பின்சென்று,
பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து,
உள்ளே பிரவேசித்து, முடிவைப்
பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான். (மத்தேயு
26:58)
peathuru, thooraththilea avarukkup
pinsen'ru, pirathaana
aasaariyanudaiya aramanaivaraikkum vanthu,
u'l'lea piraveasiththu,
mudivaip paarkkumpadi seavagaroadea udkaarnthaan. (maththeayu
26:58)
பிரதான
ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார்
யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு
விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;
(மத்தேயு 26:59)
pirathaana aasaariyarum moopparum
sanggaththaar yaavarum
iyeasuvaik kolaiseyyumpadi avarukku
viroathamaayp poychsaadchi theadinaarga'l; (maththeayu 26:59)
ஒருவரும்
அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும்
அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை;
கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:
(மத்தேயு 26:60)
oruvarum agappadavillai; aneagar vanthu
poychsaadchi solliyum avarga'l saadchi ovvavillai;
kadaisiyilea ira'ndu
poychsaadchiga'l vanthu:
(maththeayu 26:60)
தேவனுடைய
ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்றுநாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே
ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.
(மத்தேயு 26:61)
theavanudaiya aalayaththai
idiththuppoadavum, moon'runaa'laikku'l'lea
athaik kattavum ennaalea
aagum
en'ru
ivan sonnaan
en'raarga'l. (maththeayu 26:61)
அப்பொழுது,
பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள்
உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.
(மத்தேயு 26:62)
appozhuthu, pirathaana
aasaariyan ezhunthirunthu, avarai
noakki: ivarga'l
unakku viroathamaaych saadchisollugi'rathaikku'riththu
nee on'rum sollugi'rathillaiyaa
en'raan.
(maththeayu 26:62)
இயேசுவோ
பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான
ஆசாரியன் அவரை நோக்கி:
நீ தேவனுடைய குமாரனாகிய
கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச்
சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில்
உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன்
என்றான். (மத்தேயு 26:63)
iyeasuvoa peasaamalirunthaar.
appozhuthu, pirathaana aasaariyan avarai
noakki: nee theavanudaiya
kumaaranaagiya ki'risthuthaanaa? athai
engga'lukkuch sollumpadi jeevanu'l'la
theavanpearil unnai aa'naiyittuk keadki'rean en'raan. (maththeayu
26:63)
அதற்கு
இயேசு: நீர் சொன்னபடிதான்;
அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின்
மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல்
காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்றார். (மத்தேயு 26:64)
atha’rku iyeasu: neer sonnapadithaan; an'riyum, manushakumaaran sarvavallavarudaiya valathupaarisaththil veet'riruppathaiyum vaanaththin
meagangga'lmeal varuvathaiyum
ithumuthal kaa'nbeerga'len'ru, ungga'lukkuch sollugi'rean en'raar. (maththeayu 26:64)
அப்பொழுது
பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்;
இனிச் சாட்சிகள் நமக்கு
வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது
கேட்டீர்களே. (மத்தேயு 26:65)
appozhuthu pirathaana
aasaariyan than
vasthirangga'laik kizhiththukko'ndu: ivan
theavathoosha'nam sonnaan; inich saadchiga'l
namakku vea'ndiyathenna? ithoa,
ivan thoosha'naththai ippozhuthu
keatteerga'lea. (maththeayu
26:65)
உங்களுக்கு
என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு
அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.
(மத்தேயு 26:66)
ungga'lukku ennamaayth thoan'rugi'rathu en'ru keattaan. atha’rku avarga'l: mara'naththukkup paaththiranaayirukki'raan en'raarga'l. (maththeayu 26:66)
அப்பொழுது,
அவருடைய முகத்தில் துப்பி,
அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில்
அறைந்து: (மத்தேயு 26:67)
appozhuthu, avarudaiya
mugaththil thuppi,
avaraik kuttinaarga'l; silar avaraik
kannaththil a'rainthu: (maththeayu 26:67)
கிறிஸ்துவே,
உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச்
சொல்லும் என்றார்கள். (மத்தேயு
26:68)
ki'risthuvea,
ummai adiththavan yaar?
athai gnaanathirushdiyinaal engga'lukkuch sollum en'raarga'l. (maththeayu
26:68)
அத்தருணத்தில்
பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில்
உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி
ஒருத்தி அவனிடத்தில் வந்து:
நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட
இருந்தாய் என்றாள். (மத்தேயு
26:69)
aththaru'naththil peathuru
ve'liyea vanthu aramanai
mut'raththil udkaarnthirunthaan. appozhuthu, vealaikkaari
oruththi avanidaththil vanthu: neeyum
kalileayanaagiya iyeasuvoadeakooda irunthaay
en'raa'l.
(maththeayu 26:69)
அதற்கு
அவன்: நீ சொல்லுகிறது
எனக்குத் தெரியாது என்று,
எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான்.
(மத்தேயு 26:70)
atha’rku avan: nee sollugi'rathu enakkuth
theriyaathu en'ru,
ellaarukkum munbaaga ma'ruthaliththaan.
(maththeayu 26:70)
அவன், வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது
வேறொருத்தி அவனைக் கண்டு:
இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட
இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.
(மத்தேயு 26:71)
avan, vaasal ma'ndabaththi’rkup
poanapozhuthu vea'roruththi
avanaik ka'ndu: ivanum
nasareayanaagiya iyeasuvoadeakooda irunthaan
en'ru
anggea
irunthavarga'lukkuch sonnaa'l. (maththeayu
26:71)
அவனோ: அந்த மனுஷனை
நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும்
மறுதலித்தான். (மத்தேயு 26:72)
avanoa: antha
manushanai naan a'riyean en'ru aa'naiyittu, ma'rupadiyum ma'ruthaliththaan. (maththeayu
26:72)
சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே
நீயும் அவர்களில் ஒருவன்;
உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.
(மத்தேயு 26:73)
sat'runearaththukkuppinbu anggea nin'ravarga'l
peathuruvinidaththil vanthu: meyyaagavea neeyum
avarga'lil oruvan;
un peachchu unnai
ve'lippaduththugi'rathu en'raarga'l. (maththeayu 26:73)
அப்பொழுது
அவன்: அந்த மனுஷனை
அறியேன் என்று சொல்லி,
சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்.
உடனே சேவல் கூவிற்று.
(மத்தேயு 26:74)
appozhuthu avan:
antha manushanai a'riyean en'ru solli, sabikkavum saththiyampa'n'navum thodangginaan. udanea
seaval
koovit'ru. (maththeayu
26:74)
அப்பொழுது
பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம்
மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே
போய், மனங்கசந்து அழுதான்.
(மத்தேயு 26:75)
appozhuthu peathuru:
seaval
koovugi'ratha’rkumunnea nee
ennai moon'rutharam ma'ruthalippaay
en'ru
iyeasu
thannidaththil sonna vasanaththai
ninaiththukko'ndu, ve'liyea poay,
manangkasanthu azhuthaan.
(maththeayu 26:75)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!